பெப்சி, கோக் ஆகிய வெளிநாட்டு பானங்கள் வருவதற்கு முன்பாக, நம்முடைய முன்னோர்கள் இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பானங்களையே குடித்து வந்தனர்.
அவை உடலுக்கு ஆரோக்கியமும் வீரியமும் அளிக்கக்கூடியவை. அப்படி என்னென்ன பானங்களை குடித்துவந்தனர்.
அவை செரிமாணக்கோளாறு, அஜீரணம், குடலிறக்கம் போன்ற பிரச்னைகளை சரிசெய்யும் பானங்களாக அவை இருந்தன.
பானகம்
வெந்நீரில் புளி, நாட்டுச்சர்க்கரை, சுக்கு, எலுமிச்சை சாறு ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுவது பானகம். இதில் ஐஸ் சேர்க்கக்கூடாது. வெயில் காலத்தில் சூடு பிடித்தல், நீர்ச்சத்து குறைபாடு ஆகிய பிரச்னைகளில் இருந்து காக்கும்.
பதநீர்
கிராமப்பகுதிகளில் கோடைக்காலத்துக்கு ஏற்ற பானமாகக் கருதப்படுவது பதநீர். உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. இது பனைமரத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் கால்சியம், இரும்புச்சத்துகள் மிகுதியாக இருக்கிறது. இது கர்ப்பிணிகளுக்கு மிக உகந்த பானமாகவும் இருக்கிறது.
இளநீர்
உடல் சூட்டைத் தணிக்கும். இளநீர் கோடைக்காலத்தில் மற்ற எல்லா பானங்களையும் விட, எளிதில் கிடைக்கக்கூடிய, எந்த கலப்படமும் இல்லாத ஒரிஜினல் டிரிங்.
நன்னாரி சர்பத்
நன்னாரி வேர் கொண்டு தயாரிக்கப்படும் இது ரெடிமேடாக சந்தையில் கிடைக்கிறது. இதில் எலுமிச்சை மற்றும் குளிர்ந்த நீர் கலந்து தினமும் குடித்துவர, உடல் சூடு தணிக்கும்.
நீர்மோர்
நீர்மோரை குளிர்காலத்தைத் தவிர மற்ற நுரங்களில் தாராளமாகக் குடிக்கலாம். உடலில் நீர் வறட்சி உண்டாகாமல் பாதுகாக்கும். மதிய நேரத்தில் பருகுவது மிகச்சிறந்தது.
காயகல்பம்
காலையில் இஞ்சிச்சாறு, மதியம் சுக்குப்பொடி, இரவு கடுக்காய் பொடி நீர் என மூன்று வேளையும் சேர்த்து பருகும் பண்டைய பானம் தான் காயகல்பம். இது உடல் சூட்டையும் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பஞ்சலோகம்
உடல் கூட்டைக் குறைத்து நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும். சுக்குப்பொடி, திப்பிலி, திப்பிலி வேர், மிளகு வேர்ப்பொடி, கொடிவேலி வேர்ப்பொடி ஆகியவற்றை தலா 5 கிராம் அளவு எடுத்துக்கொண்டு, 200 மில்லி மோரில் கலந்து குடிக்க வேண்டும். இது குளிர்காலத்தில் உண்டாகும் சளி, இருமல் பிரச்னைக்கும் நல்ல தீர்வாக அமையும்.