Home இரகசியகேள்வி-பதில் விறைப்பு பிரச்சனை தொடர்பில் மருத்துவரிடம் கேட்டறியவேண்டியது ?

விறைப்பு பிரச்சனை தொடர்பில் மருத்துவரிடம் கேட்டறியவேண்டியது ?

443

இரகசியகேள்வி-பதில் இரகசியகேள்வி-பதில்ஆண், பெண் உறவில் கலவி இயற்கையானது. ஆனால், துணையில் யாரேனும் ஒருவருக்கு செக்ஸுவல் ஹெல்த் பிரச்சனைகள் வந்துவிட்டால் அதை விட மோசமானது வேறேதும் இல்லை.

பெரும்பாலும், செக்ஸுவல் பிரச்சனைகள் பற்றி ஆண், பெண் மத்தியில் தெளிவான புரிதல் இல்லை. செக்ஸுவல் பிரச்சனைகள் இருப்பதை அறிந்தாலும், அதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டறிய அவர்கள் கூச்சப் படுகிறார்கள்.

சிலர் பிரச்சனைகள் பெரிதாகும் வரை, கலவி வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கும் வரை விட்டுவிடுவார்கள். பிறகு கடைசி கட்டத்தில் மருத்துவர்களிடம் போய் முட்டி மோதி நிற்பார்கள்.

சமீபத்தில் லாயிட்ஸ் பார்மஸி நடத்திய ஆய்வு ஒன்றில் நிறைய ஆண்களுக்கு விறைப்பு பிரச்சனைகள் இருக்கிறது என்றும். விறைப்பை கட்டுப்படுத்த அவர்களுக்கு தெரிவதில்லை என்றும் கண்டறிந்துள்ளனர். முக்கியமாக ஐரோப்பியாவில் நான்கில் ஒரு ஆணுக்கு ஒவ்வொரு முறை கலவியில் ஈடுபடும் போதும் இந்த பிரச்சனை ஏற்படுகிறதாம்.

ஆய்வில் பங்கெடுத்துக் கொண்டவர்களில் 42% பேர் தங்களுக்கு பாதி விறைப்பு பிரச்சனை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். பத்தில் ஒரு ஆண் மருத்துவர் அறிவுரை கேட்பதற்கு தயங்கி தங்கள் கலவி வாழ்க்கையையே விட்டுக் கொடுத்துள்ளனர்.

ஆண்கள் தங்கள் விறைப்பு சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய ஒரு எளிய மற்றும் வேகமான டெஸ்ட் ஒன்றை லாயிட்ஸ் பார்மஸி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்கள் விறைப்பு சார்ந்து தங்களுக்குள்ள பிரச்சனைகளை அறிந்துக் கொள்ளலாம். இது வெறும் 60 நொடிகளில் முடிக்கக்கூடிய டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

60 நொடி விறைப்பு டெஸ்ட்!

இந்த 60 நொடி விறைப்பு டெஸ்ட் ஆனது ஏழு கேள்விகளாய் கொண்டிருக்கிறது. இந்த டெஸ்டில் கேட்கப்படும் அந்த ஏழு கேள்விகள்…

கேள்வி #1
1. உங்களுக்கு எந்த அளவிற்கு விறைப்பு ஏற்படுத்துகிறது? அதை உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா?

விறைப்பு குறித்து எந்த கவலையும் இல்லை

தைரியமாக தான் இருக்கிறேன். ஆயினும், சில சமயம் கவலை கொள்கிறேன்.

50:50

அவ்வளவு தைரியம் இல்லை.

சுத்தமாக தைரியம் இல்லை

கேள்வி #2
2. உங்களுக்கு ஏற்படும் விறைப்பானது பெண்ணுறுப்பில் ஊடுருவி செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இருக்கிறதா?

ஊடுருவும் போது எந்த பிரச்சனையும் இல்லை.

ஊடுருவ தேவையான அளவுவிறைப்பு கொள்கிறேன்.

50:50

பாதி அளவு கொள்வதாக அறிகிறேன்.

கலவியில் ஈடுபடும் அளவிற்கு விறைப்பு ஏற்படுவதில்லை.

கேள்வி #3

இந்த டீ கறை மட்டும் போகவே மாட்டேங்குதா?… அட! டூத் பேஸ்ட் போதுமே இத சரிபண்ண… இந்த டீ கறை மட்டும் போகவே மாட்டேங்குதா?… அட! டூத் பேஸ்ட் போதுமே இத சரிபண்ண…
நாக்கு அடிக்கடி வறண்டு போகுதா? ஏதாவது மோசமான அறிகுறியா இருக்குமோ? இத படிங்க பீதி குறையும்… நாக்கு அடிக்கடி வறண்டு போகுதா? ஏதாவது மோசமான அறிகுறியா இருக்குமோ? இத படிங்க பீதி குறையும்…

கேள்வி #3
3. செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது உங்களால் விறைப்பை தக்கவைத்துக் கொள்ள முடிகிறதா?

எப்போதும் தக்கவைத்துக் கொள்ள முடியும்

பெரும்பாலும் தக்கவைத்துக் கொள்வேன், சில சமயம் முடிவதில்லை.

50:50

பெரும்பாலும் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை.

எப்போதுமே என்னால் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை.

கேள்வி #4

கேள்வி #4
4. செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது, கடைசி வரை விறைப்பை தக்க வைத்துக் கொள்வதில் எத்தனை சிரமம் ஏற்படுகிறது?

நிஜமாகவே சிரமமாக தான் இருக்கிறது. என்னால் விறைப்பை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை.

சிரமம் தான். ஆனாலும், தக்கவைத்துக் கொள்கிறேன்.

பாதிக்கு பாதி சிரமமாக கருதுகிறேன்.

கொஞ்சம் சிரமம் தான். அனாலும், தக்கவைத்துக் கொள்வேன்.

அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.

கேள்வி #5
5. உங்கள் செக்ஸ் உணர்வு மகிழ்சிகரமாக அமைகிறதா?

எப்போதுமே.

பெரும்பாலும் சந்தோசமாக தான் இருக்கிறோம். ஆனால், இதைவிட சிறந்ததாக அமைத்துக் கொள்ளலாமோ என்று கருதுகிறேன்.

50:50 சந்தோசமாக உணர்கிறேன்.

எப்போதும் சந்தோசமாக உணர்ந்ததே இல்லை.

எனக்கு செக்ஸ் மகிழ்ச்சிகரமாக இல்லை.

கேள்வி #6
6. கீழ்காணும் ஏதேனும் ஒன்று விறைப்பில் எதிர்வினை தாக்கம் ஏற்படுத்தி இருகிறதா?

மன அழுத்தம்/ நரம்பு மண்டல தாக்கம்

மதுபானம் / போதை பொருள்

24 மணிநேரத்தில் பல முறை கலவியில் ஈடுபடுதல்.

அப்படி எதிர்மறை தாக்கம் ஏதுமில்லை.

கேள்வி #7
7. எப்போது நீங்கள் நல்ல விறைப்பு கொள்கிறீர்கள்

சுய இன்பம் காணும் போது

ஆபாசப்படங்களை காணும் போது

கலவி உறவில் ஈடுபடும் போது.