Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தின்போது நல்ல தூக்கம் வருவதற்கான 6 வழிகள்

கர்ப்ப காலத்தின்போது நல்ல தூக்கம் வருவதற்கான 6 வழிகள்

43

கிட்டத்தட்ட அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் ஒரு கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். தூங்கும் தோரணைகள் அனைத்தையும் முயற்சி செய்தாலும்கூட, சரியான தூக்கத்தை பெற முடியாது.

உங்கள் தூக்கத்திற்கு உதவும் சில எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பகல் நேர தூக்கத்தை குறைத்துக்கொள்ளவும் (Keep your daytime naps short):

பகலில் உங்களுக்கு சிறுதூக்கத்திற்கான நேரம் இருந்தால், அந்த சிறுதூக்கமானது 30 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும். 30 நிமிடங்களுக்கு மேல் தூங்கும்போது உடல் ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்வதால் எழுதல் மிகவும் கடினமாக இருக்கும். மேலும் பகலில் அதிக நேரம் தூங்கினால், இரவு நேரத்தில் தூங்குவதற்கு சிரமமாக இருக்கும்.

இரவு நேரங்களில் தாமதமாக உண்பதைத் தவிர்க்கவும் (Skip late night Munching):

படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு எதையும் சாப்பிடக்கூடாது. இரைப்பை பகுதி வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், இது இரவு முழுவதும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

படுக்கைக்கு செல்வதற்கு முன் தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்க்கவும் (Avoid drinking large amount of water before going to bed):

படுக்கைக்கு செல்வதற்கு முன் தண்ணீர் அதிகம் குடிப்பதால் இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால் இரவு நேர தூக்கம் கெடும்.

படிக்கலாம் அல்லது இசை கேட்கலாம் (Reading or Listening to Music):

படுக்கைக்கு செல்வதற்கு முன்பு புத்தகத்தை படிக்க முயற்சிக்கவும் அல்லது இனிமையான மென்மையான மெலடி பாடல்களைக் கேட்க முயற்சிக்கவும். இசை மனதிற்கு அமைதி அளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே முயற்சி செய்து பாருங்கள்.

புரண்டு புரண்டு படுப்பதை தவிர்க்கவும் (Avoid tossing and turning):

தூக்கம் வரவில்லையெனில் படுக்கையின் மீது படுக்காதீர்கள், அது எந்த நன்மையையும் ஏற்படுத்தாது. உண்மையில் அது உங்களுக்கு துயரத்தை ஏற்படுத்தும். மாறாக எழுந்து வீட்டைச் சுற்றி நடக்க முயற்சிக்கவும் அல்லது லேசான வேலைகளை செய்யவும். சிறிது நேரத்திற்கு பின், தூங்க முடிகிறதா என்று முயற்சித்துப் பார்க்கவும்.

சரியான தலையணைகளை சரியான இடத்தில் பயன்படுத்தவும் (Use correct pillow at proper places):

மிகவும் கடினமாகவும் இல்லாமல், மிகவும் மிருதுவாகவும் இல்லாமல் சரியான தலையணைகளைப் பயன்படுத்தவும்; அந்தத் தலையணை உங்கள் தலையை முறையாக தாங்க வேண்டும். மேல் உடலைத் தாங்குவதற்கு உறுதியான தலையணையைப் பயன்படுத்தவும். இது உதரவிதானத்தின் மீது குறைந்த அழுத்தத்தை செலுத்தி நீங்கள் எளிதாக சுவாசிக்க உதவும்.