Home பெண்கள் அழகு குறிப்பு கண் வறட்சியை சரி செய்ய 6 குறிப்புகள்

கண் வறட்சியை சரி செய்ய 6 குறிப்புகள்

66

கண்ணீர் போதுமான அளவு சுரக்காததால், கண்ணில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் நிலையை ‘கண் வறட்சி நோய்த்தொகுப்பு’ என்கிறோம். இந்தப் பிரச்சனை இருப்பவர்களுக்கு, எப்போதும் கண்கள் வறண்டு இருக்கும், அரிப்பு இருக்கும், எரிச்சல் இருக்கும்.

இந்தப் பிரச்சனையை சமாளிக்க சில குறிப்புகள்:

கண்களில் அதிக நேரம் காற்று படாமல் பார்த்துக்கொள்ளவும்: காற்று, மின்விசிறிகள், ஹேர் ட்ரையர் போன்றவை கண்களை வறட்சியடையச் செய்யலாம்.எனவே, அவற்றால் நீண்ட நேரம் பாதிக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். காற்று வீசும் போது வெளியே உலாவுவது உங்களுக்குப் பிடிக்கும் என்றால், காற்று கண்களில் நேரடியாக வீசாதபடி தடுக்க நன்றாக மூடும் (ராப் அரவுண்ட்) சன்கிளாஸ் அணிந்துகொள்ளவும்.
குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை கண்களுக்கு ஒய்வு கொடுக்கவும்: தொலைக்காட்சி பார்க்கும்போது, கணினியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அல்லது புத்தகம் வாசிக்கும்போது கண் வறண்டு போவதுபோல் தெரிந்தால் அவ்வப்போது இடைவேளை எடுத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு அவ்வப்போது போதிய ஓய்வளிப்பதும், அடிக்கடி கண் சிமிட்டுவதும், கண்ணின் இழந்த ஈரப்பதம் திரும்பக் கிடைக்க உதவும்.

புகையைத் தவிர்க்கவும்: வாகனப் புகை, வீட்டு சமையலறைப் புகை, தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை, பீடி சிகரெட் போன்றவற்றின் புகை போன்றவை கண்களை இன்னும் எரிச்சல் அடையச் செய்யும்.மேலும், சிகரெட் புகைப்பதால் கண் வறட்சி ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகிறது. எனவே, கூடுமானவரை கண்களில் புகை படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சூடான ஒற்றடம் மற்றும் கண் சுத்தம்: மென்மையான சோப்பு அல்லது குழந்தைகளுக்கான ஷாம்பு போட்டு கண் இமைகளை லேசாக மசாஜ் செய்து கழுவுவது கண்களில் உள்ள சுரப்பிகளில் இருந்து எண்ணெய் வெளியேற உதவும். இந்தச் சுரப்பிகளே கண்ணீரின் தரத்திற்குப் பொறுப்பு.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட உணவு வகைகள்: மீன்களிலும், ஆளி விதைகளிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயற்கையாக உள்ளன. கண் வறட்சி உள்ளவர்களுக்கு இது நல்ல நிவாரணம் கொடுக்கலாம்.

கணினி அமைப்புகளை சரியாக வைக்கவும்: கண்ணுக்கு அதிக சிரமம் கொடுக்காத வகையில் கணினி அமைப்புகளை சரிசெய்து வைத்துக்கொள்ளுங்கள். கணினியின் திரை கண்ணின் உயரத்திற்கு சமமான உயரத்தில் இருக்க வேண்டும் அல்லது சற்று கீழே இருக்க வேண்டும். கணினியில் வேலை செய்யும்போது ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒருமுறை, எழுந்து சென்று இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண் வறட்சியின் அறிகுறிகள் தொந்தரவாகும்போது, முறையான சோதனை மற்றும் சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.