Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஐந்தே நாட்களில் 10 கிலோ எடை குறையணுமா?… இந்த சாப்பாட மட்டும் சாப்பிடுங்க…

ஐந்தே நாட்களில் 10 கிலோ எடை குறையணுமா?… இந்த சாப்பாட மட்டும் சாப்பிடுங்க…

30

ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் அதிகமாக இருந்தால், அவர்கள் பல உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும். ஏனெனில் அத்தகையவர்களது உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருக்கும்.

உடலில் கொழுப்புக்கள் தேங்குவதால், அது இரத்த குழாய்களில் அடைப்புக்களை ஏற்படுத்தி இதய நோய்களுக்கு எளிதில் வழிவகுக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, அதிகரிக்கும் நம் உடல் எடையைக் குறைக்க பல வழிகள் உள்ளன. குறிப்பாக பல டயட்டுகள் உள்ளன.

7 நாட்களில் 10 கிலோ எடையைக் குறைக்க உதவும் டயட் திட்டம் குறித்து கூறியது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

காலை உணவு

என்ன தான் எடையை குறைக்கும் டயட்டில் இருந்தாலும், காலை உணவு மிகவும் இன்றியமையாதது. இதய மருத்துவர் கூறிய டயட்டில் அனைத்து நாட்களும் காலையில் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும். குறிப்பாக திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களைத் தவிர்த்து, வேறு எந்த பழத்தையும் சாப்பிடலாம்.

முதல் நாள்

மதிய உணவு: 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சு, 200 மிலி தயிர்

இரவு உணவு: 2 தக்காளி, 2 வேக வைத்த முட்டைகள், 2 துண்டு பிரட் டோஸ்ட், 1/2 வெள்ளரிக்காய்

இரண்டாம் நாள்

மதிய உணவு: 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சு, 1 கப் தயிர்

இரவு உணவு: 1 ஆரஞ்சு, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 கப் டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல்

மூன்றாம் நாள்

மதிய உணவு: 1 வேக வைத்த முட்டை, 1 ஆரஞ்சு, 1 வெள்ளரிக்காய்

இரவு உணவு: 1 ஆரஞ்சு, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 கப் டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல்

நான்காம் நாள்

மதிய உணவு: 1 தக்காளி, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் காட்டேஜ் சீஸ்

இரவு உணவு: 1 ஆரஞ்சு, 1 துண்டு பிரட் டோஸ்ட், 125 கிராம் வேக வைத்த இறைச்சி, 1 கப் டீ அல்லது காபி சர்க்கரை இல்லாமல்

ஐந்தாம் நாள்

மதிய உணவு: 1 தக்காளி, 1 துண்டு பிரட் டோஸ்ட், 200 கிராம் வேக வைத்த இறைச்சி அல்லது மீன்

இரவு உணவு: 1 கப் வேக வைத்த கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி

குறிப்பு

காய்கறிகளை வேகவைத்து சாப்பிடும்போது உப்பு சேர்க்கக்கூடாது.
ஐந்து நாட்கள் டயட் முடிந்தவுடன் இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் டயட்டை தொடர வேண்டும்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் இந்த டயட் இருக்கும்போது ஆல்கஹாலை தொடவே கூடாது.