Home ஆண்கள் ஆணுறுப்புகள் பற்றி பெண்களுக்குத் தெரியாத சீக்ரெட்ஸ்

ஆணுறுப்புகள் பற்றி பெண்களுக்குத் தெரியாத சீக்ரெட்ஸ்

108

captureஆணுடைய உடலைப் பற்றிப் பெண்ணும் பெண்ணின் உடலைப் பற்றி ஆணும் முழுமையாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். அதிரும் அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

ஆண்கள் தங்கள் ஆணுறுப்புகளால் உடலுறவில் சுகத்தை மட்டுமில்லாமல் அவ்வப்போது சில சிக்கல்களையும் எதிர் கொள்கிறார்கள் என்பதையும் பெண்கள் அறிந்திருப்பதில்லை.

ஆண்கள் தங்கள் ஆணுறுப்புகள் மூலம் தினமும் எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்று தெரியுமா?

சுருங்குதல்

பெண்ணுறுப்பு எப்படியெல்லாம் நெகிழ்வுத் தன்மை உடையதோ அதைப் போலத்தான் ஆணுறுப்பும் எலாஸ்டிக் தன்மையுடையது. அது ஆண்கள் மூடாகும் போது விரிந்தும் மற்ற நேரங்களில் சுருங்கியும் இருக்கும். ஆனால் பல நேரங்களில் ஆண்கள் அதிகாலையில் தூங்கி எழுந்திருக்கும் பொழுது ஆணுறுப்பு விறைப்புத்தன்மை அடையும். இதற்குக் காரணம் ஆண்களுக்கு உண்டாகும் இச்சையோ அல்லது உடலுறவில் ஈடுபட்டபின் உறங்குவதனாலோ இல்லை. ஆண்களுக்கு ஏற்படும் இயல்பான விஷயங்களில் இதுவும் ஒன்று தான்.

பேண்ட் ஜிப்

ஆண்கள் செய்யும் வேலைகளிலேயே மிக கவனமாக செய்ய வேண்டியது பேண்டுக்கு ஜிப் போடுவது தான். ஆமாம். ஜிப் போடும் போது கவனமாக இல்லாமல் ஜிப்பை வேகமாகப் போட்டு, அது ஆணுறுப்பில் லேசாக மாட்டிக் கொண்டால் அவ்வளவு தான். அவர்களுக்கு உயிர் போகும் அளவுக்கு வலி உண்டாகும். அந்த வலியின் கொடுமையை எல்லா ஆண்களும் ஒரு முறையாவது அனுபவித்திருப்பார்கள். பெண்கள் அதைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பொதுவிடங்களில் சங்கடம்

கசமுசாக்கள், பிட் படங்கள் என்று எதுவும் பார்க்காத போதும் கூட திடீரென ஆணுறுப்பு விறைப்பு உண்டாகிவிடும். அதிலும் பொதுவிடங்களில் இது போன்ற சங்கடங்கள் நேரும் போது அதை சமாளிக்க ஆண்கள் படும் பாடு இருக்கிறதே அதை சொல்லிப் புரிய வைக்க முடியாது.

சிறுநீர் கழிப்பது

ஆண்களுக்கு அவர்களுடைய ஆணுறுப்பு விறைப்பு உண்டாகியிருக்கும் போது சிறுநீர் கழிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்பது அதை அனுபவிக்கும் ஆண்களுக்கு மட்டுமே புரியும். அதை நினைத்துப் பார்க்கும் ஆண்களுக்கு அந்த மொமண்டை நினைத்தாலே அழுகையும் சிரிப்பு சேர்த்தே வரும்.

அளவு

ஆணுறுப்பின் இந்த ரகசியம் பற்றி ஆண்களுக்கே பல பேருக்குது் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆண்கள் பிட்டு படங்கள் பார்த்துப் பார்த்து அதில் காட்டுவது போல் ஆறு அங்குலத்துக்கு மேல் இருந்தால் தான் அந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒருவர் அந்த விஷயங்களில் சிறந்து விளங்குவதற்கும் ஆணுறுப்பின் சைஸிற்கும் சம்பந்தம் கிடையாது. நான்கு அங்குலத்துக்கும் குறைவாக உள்ள மைக்ரோ சைஸ் உள்ளவர்கள் மட்டுமே அந்த விஷயத்தில் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள்.