Home சமையல் குறிப்புகள் ஸ்பெஷல் சிக்கன் கப்சா

ஸ்பெஷல் சிக்கன் கப்சா

38

captureஅசைவப் பிரியர்களின் விருப்ப உணவுப் பட்டியலில் பெரும்பாலும் இடம் பிடிப்பவை சிக்கன். விடுமுறை நாள் என்றாலே வீட்டில் சிக்கன் இருக்கும். அவற்றைச் சுவையாக சமைப்பது எப்படி எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 8 பெரிய துண்டுகள்
பாஸ்மதி அரிசி – 1 கிலோ (45 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்)
கேரட் – 2 கப் (சிறிய துண்டுகளாக)
வெங்காயம் – 2 கப் (சிறிய துண்டுகளாக)
தக்காளி – 2 கப் (சிறிய துண்டுகளாக)
தக்காளி கூழ் – 1 தேக்கரண்டி
இஞ்சி – ½ தேக்கரண்டி
மிளகு தூள் – ½ தேக்கரண்டி
ஆரஞ்சு தோல் தூள் – ½ தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
இலவங்கப்பட்டை பொடி – ½ தேக்கரண்டி
கிராம்பு தூள் – ¼ தேக்கரண்டி
எலுமிச்சை – 1
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

அலங்கரிக்க

பாதாம் – ¼ கப் ( இரண்டு துண்டுகளாக)
உலர்ந்த திராட்சை – ¼ கப்

செய்முறை

முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், சிக்கனை சேர்க்கவும்.

அடுத்ததாக, ஆரஞ்சு தோல் தூள், மிளகு தூள், ஏலக்காய் தூள், பட்டை பொடி, கிராம்பு தூள், தக்காளி சாறு, நறுக்கிய தக்காளி, எலுமிச்சை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

அடுத்ததாக, மூன்று கப் தண்ணீர் ஊற்றி சிக்கன் வேகும் வரை 25 நிமிடம் மூடி வைக்கவும். சிக்கன் பாதி வெந்ததும் அதனுடன் பாஸ்மதி அரிசி, கேரட் சேர்த்து 25 நிமிடம் வேகவைக்கவும்.

அதே நேரத்தில், இன்னோரு வாணலி எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சையை மிதமாக வறுக்கவும்.

பின்னர், பாத்திரத்தை எடுத்து, அதில் சாதத்தை பரவிவிட்டு, அதன் மேல் சிக்கன் துண்டுகளை வைக்கவும். பிறகு, வறுத்த பாதாம், திராட்சையை அதன் மேல் தூவி விடவும்.

இப்போது சூடான, சுவையான ஸ்பெஷல் சிக்கன் கப்சா ரெடி.