பிரெஞ்சு ஆசிரியை ஒருவர் இளம் வயது மாணவனுடன் ஒரே படுக்கையில் இருந்த குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
எடின்பர்க்கில் உள்ள பள்ளியின் சார்பில் இசை விருந்து நிகழ்ச்சி Carlton Highland ஹொட்டலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட Isabelle Graham என்ற ஆசிரியை அளவுக்கதிமாக மது அருந்திவிட்டு, மாணவனுடன் 3 மணிநேரம் ஒரே படுக்கையில் இருந்துள்ளார்.
இதனை கதவுக்கு அருகாமையில் மறைந்து நின்று கொண்டு மற்றொரு மாணவன் படம்பிடித்துள்ளான். ஆனால், இவர்கள் இருவரும் தான் அந்த புகைப்படத்தில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு புகைப்படம் தெளிவாக இல்லை.
காலை 5 மணியளவில் ஆசிரியை கண்விழித்தபோது தான், என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியவந்துள்ளது, ஆனால் ஆசிரியை தன் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டை மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது, இந்த சம்பவத்திற்கு பிறகு ஆசிரியை பணியிலிருந்து விலகிக்கொண்ட இவர், Andrew Wilki என்பரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் வாழ்க்கையை கழித்து வருகிறார்.
இதற்கிடையில், பள்ளி நிர்வாகம் சார்பில் இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதுபோன்ற சம்பவம் எனது அறிவுக்கு அப்பாற்பட்டு நடந்த ஒன்று என கூறியுள்ளார். மேலும் இவரது கணவரும் எனது மனைவி இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர் கிடையாது. அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.
தற்போது இது தொடர்பான வழக்கு விசாரணை வருகிற செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.