Home ஜல்சா போலீசாருக்கு அறை ; காவல் நிலையத்தில் லிப் டூ லிப் : காதலர்கள் அடாவடி

போலீசாருக்கு அறை ; காவல் நிலையத்தில் லிப் டூ லிப் : காதலர்கள் அடாவடி

34

kiss-2மதுபோதையில் இருந்த காதலர்கள் போலீசாரை தாக்கியதோடு, காவல் நிலையத்திலியே முத்தம் கொடுத்துக் கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்த விவேகானந்தன் என்பவரும், பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் தனது காதலனை சந்திப்பதற்காக, அர்ச்சனா வேலூர் வந்துள்ளார். காதலனை குஷிபடுத்துவதற்காக தனது நகையை ரூ.15 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்து மது விருந்து கொடுத்துள்ளார். அதோடு, காதலனோடு சேர்ந்து அவரும் மது அருந்தியுள்ளார்.
அதன்பின், மதுபோதையில் அவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சாலையில் தாறுமாறாக அவர்கள் வண்டியை ஓட்டியுள்ளனர். அதை தட்டிக்கேட்ட ஒருவரை அர்ச்சனா தாக்கியுள்ளார். இதைக்கண்ட போக்குவரத்து எஸ்.ஐ. ராம்குமார் அவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது, போதையில் இருந்த அர்ச்சனா அவரது சட்டையை பிடித்து இழுத்து அவரின் கன்னத்திலும் பளார் என அறைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண் எஸ்.ஐ ஓடிவந்து அவர்களை தடுக்க முயன்றார். அவரிடம் திமிறிய அர்ச்சனா, அவரின் கன்னத்திலும் ஒரு அறை கொடுத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஒருவழியாக அவர்கள் இருவரையும் போலீசார், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக விவேகானந்தன் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்றனர். ஆனால், தன்னுடைய காதலன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சனா கூச்சல் போட்டுள்ளார்.
உடனே விவேகானந்தன் அவரை கட்டியணைத்து ஹாலிவுட் பட ஸ்டைலில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்துள்ளார். இதை தடுக்கவும் முடியாமல், பார்க்கவும் முடியாமல் போலீசார் தலை குனிந்தனர்.
மேலும், அர்ச்சனா குடிபோதையில் போலீசாரை கீழ்த்தரமாக பேசியுள்ளார். கோபமடைந்த விவேகானந்தன், காவல் நிலையத்தில் இருந்த சேர்களை உடைத்து சேதப்படுத்தினார். பெண் போலீஸ் எஸ்.ஐ. நிர்மலாவை கீழே பிடித்து தள்ளி இருவரும் பெரிய களோபரம் செய்துள்ளனர்.
அதன்பின் போலீசார், விவேகானந்தனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தனர். விவேகானந்தன் மீது குடிபோதையில் வண்டி ஓட்டியதாகவும், அர்ச்சனா மீது போலீசாரை தாக்கியது மற்றும் பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.