Home பெண்கள் உடல் கட்டுப்பாடு 5 நிமிட யோகா தரும் அற்புதமான வாழ்க்கை

5 நிமிட யோகா தரும் அற்புதமான வாழ்க்கை

35

Captureதினமும் 5 நிமிடம் யோகாசனம் செய்தால் போதும், அற்புதமான வாழ்க்கையை நாம் அமைத்து கொள்ள முடியும்!

“அது எப்படி சாத்தியமாகும்?” என்று நீங்கள் யோசிக்கலாம். 5 நிமிட பயிற்சியை தினமும் செய்து பார்த்தால்தான் அதன் தாக்கத்தை நாம் முழுமையாக உணர முடியும்.

இதற்காகவே ஈஷா அறக்கட்டளை நமக்கு உதவ முன் வந்துள்ளது. ஒரே ஒரு நாள், அவர்கள் நமக்கு 90 நிமிட பயிற்சியும் ஆலோசனையும் கொடுப்பார்கள். வீட்டில் தினமும் 5 நிமிடம் எப்படி யோகா பயிற்சி செய்வது என்ற முழு விபரமும் அந்த 90 நிமிட பயிற்சியின் போது கற்றுத் தரப்படும். அதன் பிறகு நாம் வீட்டிலேயே தினமும் 5 நிமிடம் யோகா செய்து பயன்பெற முடியும்.
“நோயற்றே வாழ்வே குறைவற்ற செல்வம்”- என்பது நம் முன்னோர்களின் அருள்வாக்கு.

அளவற்ற செல்வங்கள் பெற்றிருந்தாலும் – நோயற்ற வாழ்வு வாழ்ந்தோமானால்தான் மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்ந்து சந்தோஷமாக வாழ முடியும். உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது யோகாசனமாகும். யோகாசனத்தை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால் உடல்நலம் கெடுவதில்லை. யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் நலமடைகிறது. ஆரோக்கியம் பெறுகிறது. மன நிம்மதி கிடைக்கிறது. ஆத்ம சக்தி பெறுகிறது.

உடற்பயிற்சியினால் உடல் மாற்றம் அடைவது போல் (கை – கால்களால் மசுல்ஸ்) வெளியில் தெரியாது. ஆனால் உடலின் உள் உறுப்புகள் உறுதியாகி, நரம்புகள் வலுவேறி, தசை நார்களை திடப்படுத்தி ரத்தத்தை உற்பத்தி செய்து, உடலில் தேங்கியுள்ள கழிவுப் பொருட்களை அகற்றி உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் பேராற்றல் யோகாசனத்திற்கு உண்டு.

மனம் அமைதியை இழக்குமானால் உடல் வலிமையை இழந்து நோய்பற்றி ஆரோக்கியத்தை இழந்து விடும். அப்போது அந்நோயைத் தாங்கும் மன வலிமை இல்லாமையால் மேலும் பல நோய்களுக்கு ஆட்பட்டு உடலே ஒரு சுமையாகி விடுகிறது.

இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது மனம்தான். ஆகையினால் மனம் தெளிவுபெற – சமன்பட யோகாசனம் மிகவும் அவசியம். மன அமைதியும் நல்லொழுக்கமும் இல்லாத ஒருவனால் ஆரோக்கியத்துடன் வாழ முடியாது. மன அமைதியுடன் – உடல் நலத்தையும் – ஆன்மீக மேம்பாட்டையும் அடைய யோகாசனம் வழி காட்டுகிறது.

யோகாசனப் பயிற்சியை முறையாகச் செய்து வந்தால் நிச்சயமாக நூறாண்டு காலத்திற்கு மேலாக ஒருவன் வாழ முடியும். அதற்கு வழிகாட்டவே 5 நிமிட பயிற்சிக்கு ஈஷா உங்களை அழைக்கிறது.

இந்திய மொழிகளில், உபயோகா என்ற வார்த்தை, துரதிஷ்ட வசமாக உபயோகம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. உப என்றால் துணை, எனவே உபயோகா என்றால், துணை-யோகா அல்லது ‘அரை என்று பொருள். (பாதி) யோகா’ என்று பொருள். அதாவது ஐந்தே நிமிடத்தில் செய்யப்படும் யோகா. இப்பிரபஞ்சத்தின் மூலத்திற்குள் உறிஞ்சப்படுவதற்கு தயாராக இல்லாத, அதே சமயத்தில் பொருள் வாழ்க்கையில் தொலைந்து போக விரும்பாத மனிதருக்காக இந்த உபயோகா கொடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஆசைகளோ நோக்கங்களோ இல்லாதவருக்கு இது தேவையில்லை.

கால மாற்றங்களில், மொழிகளின் உபயோகத்தினால் இந்த உபயோகா என்ற வார்த்தை உபயோகமான யோகா அல்லது உபயோகமான செயல் என்று மாறிவிட்டது. அது உபயோகமானது தான், அதில் எந்தசந்தேகமும் இல்லை.

ஆனால் அதை அப்படி அணுகக் கூடாது. எந்த ஒன்றையும், அதன் பலனுக்காக அணுகுவது சரியான அணுகுமுறை அல்ல, அதையும் தாண்டி அதற்கு பலபரிமாணங்கள் இருக்கக் கூடும். அதை எப்படி பயன்படுத்தி கொள்ளலாம் என்ற மனப்பான்மையை நீங்கள் மாற்றினால், அது உங்களுக்கு பலனளிக்கக் கூடியதாகமட்டுமல்லாமல், உங்களின் அடிப்படை அம்சத்தையே மாற்றியமைத்துவிடும்.
உபயோகா என்பது, ஒருவரின் ஆன்மீக பரிமாணத்தில் அதிகம் சார்ந்திராமல், உடல்நிலை, மனநிலை மற்றும் சக்திநிலையில் சார்ந்துள்ளது. ஒருவர் முழுமையானவாழ்க்கை வாழ்வதற்கான ஒரு வழிமுறையாகும்.

உடல் நிலை என்று குறிப்பிடும்போது, அதில் மனநிலையும், உணர்ச்சி நிலையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறேன். சிலர் யோகாவை வெறுமனே கடுமையான உடற்பயிற்சி போலசெய் வதற்கு பதிலாக, ஐந்து நிமிட உபயோகா செய்யலாம். ஏனென்றால் அது ஒரு சக்திவாய்ந்தவழிமுறை. அதனால் ஈர்க்கப் பட்ட பிறகு வேண்டுமானால், அவர்கள் யோகாவில்ஈடுபடலாம்.

நீங்கள் இரவு உறங்கும் போது, தட்டையான நிலையில் படுத்து அசைவில்லாமல் இருக்கிறீர்கள். அப்போது உங்கள் சக்தி நிலையிலும், மூட்டு இணைப்புகளிலும் ஒரு செயலின்மை உருவாகிறது. அதனால் இயல்பான நிலையைவிட, உங்கள் மூட்டுக்களில் உயவுத்தன்மை இல்லாமல் போகிறது. அப்படி அந்த உயவுத்தன்மை இல்லாமல் உங்கள் மூட்டுக்களை நீங்கள் நகர்த்தினால், அது அதிக நாட்களுக்கு தாங்காது.

ஒருவர், எந்த மாதிரியான மூட்டு இணைப்புகளைக் கொண்டுள்ளார் என்பதைப் பொறுத்தே உடல்நிலையில் விடுதலை என்பதற்கு வாய்ப்புள்ளது. உடலின்நாடிகள், இந்த மூட்டுப் பகுதிகளில் மட்டும் ஒரு குறிப்பிட்ட விதமாக இயங்குவதால், அனைத்து மூட்டுக்களும் சக்தியின் சேகரிப்பு மையங்கள் போன்று உள்ளன.

ஐந்து நிமிட உபயோகாவின் குறிப்பிட்ட அம்சம் மூட்டு இணைப்புகளில் உயவுத்தன்மையை வழங்குவதோடு சக்தி முனைகளையும் இயக்கச் செய்வதால் உடலின் மற்றசக்தி மண்டலங்களும் செயல்படத் துவங்குகின்றன.

உப-யோகப் பயிற்சிகள் உடல், மன நலத்தை ஒருவருக்கு வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் இந்தப் பயிற்சிக்காக நீங்கள் செலவு செய்யும் 5 நிமிடங்கள் உங்கள் வாழ்வை மாற்றியமைக்க வல்லவை. நீங்கள் நாடுவது ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு, வெற்றி, உள்நிலை அறிதல் என எதுவாய் இருந்தாலும், இப்பயிற்சிகள் உங்கள் தடுமாற்றங்களை தகர்த்தெறிந்து வாழ்வில் முன்நோக்கி படியெடுக்க உதவும்.

யோக அறிவியலின் மூலமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது அவசியமாகும். நமது கல்விமுறை தரும் மனஅழுத்தங்களாலும், போட்டி உலகில் வேலை வாய்ப்பைத் தேட வேண்டிய நிர்பந்தங்களாலும், வேலையில்லா திண்டாட்டம் தரும் மன உளைச்சலினாலும் இன்றைய இளைஞர்கள் உடல் அளவிலும் மன அளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சரியாகச் சொல்வதானால், இன்றைய இளைஞர்களின் உயிரையும் இந்த பிரச்சனைகளின் தாக்கம் குடிக்கக் கூடியதாய் உள்ளன.

இலவசமாக யோகப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், வருங்கால இந்தியாவின் நம்பிக்கைகளாக விளங்கும் இளைய சமுதாயத்தை உடல், மனதளவில் செழுமை அடையச் செய்வதற்கான முயற்சிகளைத் துவங்கியுள்ளது ஈஷா அறக்கட்டளை. உள்நிலை நலனுக்கு உறுதுணைபுரியும் ஒரு ஒப்பற்ற கருவியான யோக அறிவியலை முன்னிறுத்துவதன் மூலம், இளைஞர்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கு அவை வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல், இந்த நாட்டின் நலனுக்கும் உலக நலனுக்கும் அதுவே அடிகோலும் என்பதில் ஐயமில்லை!

மாணவர்களின் நலனுக்காக உபயோகா!

கடந்த 20 வருடங்களில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. 2014-ல் 14 வயதிற்கு உட்பட்ட 1700-க்கும் அதிகமான குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். இந்நிகழ்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. முறையான யோகப் பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் மாணவர்களின் இந்நிலைமை மாறுவதற்கு யோகா ஒரு முக்கிய பங்குவகிக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, உலக யோகா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் வாரங்களில் இந்தியா முழுவதும் 25,000 பள்ளிகளில் சுமார் 15 மில்லியன் மாணவர்களுக்கு உபயோகா பயிற்சி வழங்கும் முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.

இந்த வகுப்புகள் யோகா தினம் முடிந்த பின்னரும் கூட, வருடம் முழுவதும் தொடர்ந்து நிகழவுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் ஆனந்தமாகவும் அமைதியாகவும் கல்வி கற்றல் செயல்முறையை கையாளும் திறம்பெறுவது உறுதி செய்யப்படும்.
நல்வாழ்விற்காக 5 நிமிடங்கள் செய்யக்கூடிய இந்த எளிய பயிற்சிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் இச்செயல் திட்டத்தை நிறைவேற்ற 45,600 பள்ளி ஆசிரியர்கள் உபயோகா வகுப்புகளை நடத்துவதற்கான பயிற்சியை ஈஷா அறக்கட்டளை மூலம் பெற்றுள்ளனர்.

5 நிமிட யோகாவின் பலன்கள்

· தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி, மூட்டுகளுக்கு உயவுத்தன்மை, நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சி கொள்ளச் செய்தல்.
· மூளையில் நியூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தல், நினைவாற்றல் மற்றும் புத்திக் கூர்மை.
· தூக்கத்தின் அளவு குறைதல் மற்றும் முதுகுத்தண்டில் புத்துணர்ச்சி.
· ஆழ்ந்த அமைதியை உணர்தல், புதுவித உயிர்சக்தியை உணர்தல் மற்றும் நல்வாழ்வு.

ஆழ்ந்த உறக்கத்திற்கு யோகாசனம்!

மனித ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமாகும். ஆழ்ந்த உறக்கம் என்பது சதா தின்றுவிட்டு எப்போதும் உறங்கிக் கிடப்பது என்று பொருள் அல்ல. சதா உறங்குபவர் களுக்கு உடலில் தேவையற்ற சதை பெருகி நோய்தான் வரும்.

இரவு உணவருந்தி விட்டு படுக்கும்போது ஆழ்ந்த நித்திரை அவசியம். சரியாக நித்திரை இல்லையென்றால் அஜீரண கோளாறுகள் ஏற்பட்டு பலவித நோய்கள் வருவதற்கு வழி வகுத்து விடும்.

சிலர் சரியாக தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டு உறங்குவார்கள். இதனால் இயற்கையான தூக்கம் இல்லாமல் செயற்கை தூக்கத்தினால் தான் வாழ்நாளில் பாதியை இழந்து விடுகின்றனர் என்பதை மறந்து விடுகின்றனர்.
உழைப்பவர்கள் அயர்ந்து தூங்குகிறார்கள். ஆனால் உடலுழைப்பு அற்றவர்களில் சிலர் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறார் என்பது எதனால்?

போதிய உடலுழைப்பை அவர்கள் நல்காததுதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆகையினால் இவர்கள் ஓரளவுக்காவது உடல் உழைப்பை கொடுக்க வேண்டும்.

சரியாக உறக்கத்தைப் பெற மிக எளிதான யோகாசனப் பயிற்சியை மேற்கொண்டால் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.
கடுமையான யோகாசனப் பயிற்சியை செய்ய இயலாதவர்கள் படுக்கைக்குச் செல்லும் அரைமணி நேரத்திற்கு முன்னதாக “பத்மாசனம்” செய்து விட்டு மன நிம்மதியாகச் சென்றால் ஆழ்ந்த நித்திரை வரும்.

இலவசமாக யோகா பயிற்சிகள் பெறலாம்!

2016ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில், உங்கள் ஊரில் இலவச பயிற்சி வகுப்பை ஒருங்கிணைக்க அல்லது கலந்துகொள்ள ஈஷா அறக்கட்டளை உங்களை அன்புடன் அழைக்கிறது. 90 நிமிட நேரம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பு – அன்பு, அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் ஆகியவற்றை நல்கும் யோக அறிவியலுக்கான பயிற்சி வகுப்பாக அமையும். இது முழுக்க, முழுக்க இலவசமானது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்த ஜூன் மாதம் முழுவதும் இலவச யோகா பயிற்சியை அளிக்க ஈஷா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் தனி நபர்கள் மட்டுமல்ல குழுக்களாகவும் கலந்து கொள்ளலாம்.

பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஒன்றிணைந்து இந்த பயிற்சியை பெறலாம். அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மூலம் ஈஷா மையத்தைத் தொடர்பு கொண்டு இந்த இலவச யோகா பயிற்சியை பெறலாம்.

மகளிர் குழுக்கள், விளையாட்டுக் குழுக்கள் போன்ற குழுக்களும் யோகா பயிற்சி பெற்று பயன் அடையலாம். 90 நிமிடம் பயிற்சி பெற்று விட்டு, தினமும் வீட்டில் 5 நிமிடம் யோகா பயிற்சி செய்து உங்கள் வாழ்வையே மாற்றி அமைத்துவிடும்இலவசமாக கிடைக்கும் வாய்ப்பு என்பதால் சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். வாழ்வை மாற்றும் மகத்துவம் இந்த 5 நிமிட யோகா பயிற்சிக்கு உண்டு என்பது உறுதி.