Home ஆண்கள் 5 மணி நேரம் குறைவாக தூங்குபவர்களுக்கு ஆண்மை பாதிக்குமாம்:ஆய்வில் தகவல்

5 மணி நேரம் குறைவாக தூங்குபவர்களுக்கு ஆண்மை பாதிக்குமாம்:ஆய்வில் தகவல்

14

anmaiஐந்து மணிநேரத்திற்கு குறைவாக உறங்கும் ஆண்களுக்கு ஆண்மையை தூண்டும் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு வாரம் தூக்கம் கெட்டாலே இந்த பாதிப்பை உணரலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களின் பாலுணர்வை ஊக்குவிப்பதில் டெஸ்ட்டாஸ்ட்டுரோன் என்னும் ஹார்மோனிற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த ஹார்மோன் குறிப்பிட்ட அளவு சுரந்தால் மட்டுமே ஆண்களுக்கு உற்சாகம், ஏற்படும். பாலுணர்வில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். ஆனால் நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் இளைஞர்களுக்கு அவரது பாலியல் உணர்வை தூண்டும் பிரதான ஹார்மோனின் சுரப்பு குறைந்துவிடும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிகாகோ பல்கலைக் கழகம் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த சராசரியாக 24 வயது கொண்ட 10 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும், ஒல்லியான தேகத்துடனும், பலவித உடல் பரிசோதனைகளும், உளவியல் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். அதன் பிறகு இவர்கள் மூன்று நாட்களுக்கு இரவில் 10 மணி நேரம் வரை தூங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் எட்டு நாட்களுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆய்வின் ஒவ்வொரு நாளின்போதும், 24 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு 15 முதல் 30 நிமிடங்களுக்கும் அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. இதில் குறைவாக தூங்கியதற்கு பின்னர் இவர்களது டெஸ்ட்டாஸ்ட்டுரோன் அளவு குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் அளவுக்கும், ஆண்களின் சக்தி குறைவு, விறைப்பு தன்மை குறைதல், கவனக்குறைவு மற்றும் சோர்வடைதல் ஆகியவற்றுக்குமிடையே தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் உடல் பலம், தசைகள் மற்றும் எலும்பு வலுவடைதல் ஆகியவற்றிலும் இந்த டெஸ்ட்டாஸ்ட்டுரோன் முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற ஈவ் வான் என்ற மருத்துவ துறை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மேலும், உடல் மற்றும் மனம் சுறுசுறுப்பு குறைவதற்கும், டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைதலுக்கும் தொடர்பு உள்ளது. இதேபோல் தூக்கமின்மை நிச்சயம் பாலியல் உணர்வை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு இரவில் அதிகநேரம் கண்விழித்து இருக்கும் நமது இளைய தலைமுறையினருக்கு