Home ஆரோக்கியம் 5 நாளில் குறட்டை பிரச்சனையைத் தவிர்க்கலாம்! இதக்குடிங்க..

5 நாளில் குறட்டை பிரச்சனையைத் தவிர்க்கலாம்! இதக்குடிங்க..

45

நிறைய பேர் தூக்க பிரச்சனைகள் மற்றம் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் அபாயம் உள்ளது. சிலர், தங்களது துணையின் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள்.

குறட்டை வருவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சளி தேங்கியிருப்பது தான். அப்படி தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றிவிட்டால், சுவாசக்குழாய் சற்று விரிவடைந்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

குறட்டைப் பிரச்சனையில் இருந்து விடுபட ஓர் அற்புதமான பானம் ஒன்று உள்ளது. அதை இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், சளி வெளியேற்றப்பட்டு, குறட்டை பிரச்சனையும் நீங்கும்.

ஏன் குறட்டை வருகிறது?

ஒவ்வொருவரும் தூங்கும் போது ஏன் குறட்டை வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்படி தெரிந்து கொள்வதன் மூலமும் குறட்டை வருவதைத் தடுக்கலாம்.

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 2

எலுமிச்சை – 1/4

கேரட் – 2

இஞ்சி – 1 துண்டு

தண்ணீர் – 1/2 கப்

பானம் செய்யும் முறை செய்யும் முறை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தால், குறட்டையைத் தடுக்கும் பானம் தயார்.

நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள்

இந்த பானம் தயாரிக்கப் பயன்படுத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள், தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் கலந்த பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

குடிக்கும் நேரம்

இந்த பானத்தை இரவில் தூங்குவதற்கு 2-3 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும். மேலும் இந்த பானத்தைப் பருகும் காலங்களில், ஒருசில உணவுகளையும், பானங்களையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவை நிலைமையை மோசமாக்கும்.

தவிர்க்க வேண்டியவைகள்

* பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள்

* எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகள்

* எளிதில் செரிமானமாகாத உணவுகள்

* அதிகப்படியான சாக்லேட்

* அளவுக்கு அதிகமான ஆல்கஹால்

குறிப்பு

மேற்கூறிய பானத்தைக் குடித்து, ஒருசில உணவுகளைத் தவிர்த்து வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறி, சுவாசக் குழாய் விரிவடைந்து, குறட்டை வருவது குறைய ஆரம்பிக்கும். பின் நல்ல நிம்மதியான தூக்கத்துடன், நல்ல ஓய்வையும் பெறலாம்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்