செக்ஸ் உணர்வு என்பது ஆண் பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய ஒன்றாகும். அதிலும் திருமணம் முடிந்த தம்பதிகள் ஆரம்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அது காலப்போக்கில் போக போக வெறுக்க ஆரம்பிச்சுடுவாங்க. இதற்கு முக்கிய காரணம் குழந்தை பிறந்த பின்னர் கணவர் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் ஒரு நிலைமை ஏற்படும்.
வேலைக்காரமாக செக்ஸ் ஆசையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பார்கள்.
அதிலும் பெண்கள் 35 வயதை கடந்து விட்டால் அவர்களுக்கு சில ஹார்மோன் லெவல் சமநிலையில் இருக்காது.
இதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி ஏதாவது பிரச்சனை என்றால் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஏனெனில் ஹார்மோன் சமநிலைதான் தாம்பத்திய உணர்ச்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
நடுவயதாக இருக்கும் நேரத்தில் உங்களை பராமரித்துக் கொள்வது மட்டுமின்றி உங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களையும் பராமரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுவீர்கள்.
சில நேரங்களில் உங்களுக்கு ஓய்வு தேவைப்படும் ஆனால் அதனை பெரிது படுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பீர்கள்.
இதனால் உங்களின் ஆசைகள் கானல் நீராகி போய்விடும். எனவே கணவன் மனைவி மனம் விட்டு பேசிக்கொள்ளுங்கள், தனிமையில் இருக்கும் சமயத்தில் அடிக்கடி தாம்பத்தியத்தில் ஈடுபடுங்கள். அப்போது மனசு மற்றும் உடல் இரண்டுமே உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.