ஆண்கள் 35 வயதை அடைந்த பின்னர் ஒரு சில விசயங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் 35 வயதிற்கு மேல் ஆண்களின் உடலினுள் ஒரு சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதில் முதன்மையானது டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பித்து, அதனால் குறைவான பாலுணர்வு உந்துதல், முன்பை விட உடலின் ஆற்றல் குறைவாக இருப்பது போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
என்ன தான் கலோரி நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருந்தாலும், 35 வயதிற்கு பின் தொப்பை வரக்கூடும். இதுப்போன்று பல விசயங்களை 35 வயதை அடைந்த ஆண்கள் பின்பற்றுவதோடு, ஒரு சிலவற்றை தவிர்க்கவும் வேண்டும்.
கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், பல்வேறு தீவிர ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உண்டாக கூடும். இப்போது 35 வயதை அடைந்த ஆண்கள் பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
35 வயதிற்கு மேல் புகைப்பிடிப்பதை நிறுத்தாவிட்டால், அது ஆண்மையையே அழித்துவிடும். ஏற்கனவே 35 வயதிற்கு மேலே டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் என்பதால், புகைப்பிடிக்கும் பழக்கத்தைக்கொண்டிருந்தால், பின் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற முடியாமல் போய்விடும். எனவே நீண்ட நாட்கள் படுக்கையில் சிறப்பாக செயலாற்ற புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
துள்ளும் இளமை காலத்தில், செரிமான மண்டலம் நன்கு செயல்படும். அப்போது எந்த வகையான உணவை உண்டாலும், உணவு செரித்து விடும். ஆனால் 35 வயதிற்கு மேல், செரிமான மண்டலத்தின் சக்தி குறைய ஆரம்பிப்பதால், அப்போது தெருவோரக்கடைகளில் வாங்கி சாப்பிடுவதைத்தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், வாய்வு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
எப்போதாவது ஒரு முறை அளவாக மது அருந்துவதால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால் 35 வயதிற்கு மேல் அடிக்கடி அதிகமாக குடித்தால், அதனால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
ஆரோக்கியத்தின் மீது அக்கறை இல்லாமல், 35 வயதிற்கு மேலும் ஜங்க் உணவுகளை கண்டபடி உட்கொண்டு வந்தால், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகளால் சந்தோஷமான வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தான். எனவே ஜங்க் உணவுகளை தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
ரிலாக்ஸ் செய்கிறேன் என்று சில ஆண்கள் டிவி பார்ப்பார்கள். ஆனால் அப்படி டிவி பார்ப்பதால், கண்கள் பாதிக்கப்படுவதோடு, உளவியல் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதற்கு பதிலாக, குடும்பத்தினருடன் சிரித்து பேசவோ அல்லது வெளியே கோவிலுக்கு செல்ல வேண்டும். இதனால் மனம் அமைதியடைவதோடு, ரிலாக்ஸ் ஆகும்.
சரியான நேரத்தில் சாப்பிட்டு, தூங்கும் பழக்கத்தை 35 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளைத்தவிர்க்கலாம்.
வயது அதிகரிக்க அதிகரிக்க, உடலில் ஆற்றல் குறைவாகத் தான் இருக்கும். அதிலும் 35 வயதை எட்டிவிட்டால், சிறப்பாக செயலாற்ற சரியான நேரத்தில் தவறாமல் உணவை உட்கொள்ள வேண்டும்.
35 வயதை ஒருவர் எட்டிவிட்டால், ஆரோக்கியத்தின் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அது ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும். எவராயினும், 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
ஒருவேளை புறக்கணித்தால், அதனால் தீவிரமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். ஏனெனில் வயதாக வயதாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாகவே இருக்கும். எனவே கவனம் அவசியம்.