பொதுவாக இந்த சந்தேகம் வந்தாலே, “மனம் ஒத்துப்போனால் வயது தடையில்லை” என்கிற மாதிரியான ஆலோசனைகள் வரும். ஆனால் நிஜ வாழ்க்கையில் நடப்பது முற்றிலும் வேறுபட்டது. காதல் திருமணங்களில் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும், வாழ்க்கை மகிழ்ச்சியுடன் அமையும். எனக்கு தெரிந்து என்னுடைய நண்பனின் திருமணத்தில் போட்டோகிராபராக பணியாற்றியவருக்கு வயது 36 இருக்கும். அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு வெறும் 19 வயது தான்.
இவ்வளவு வருட வயது வித்தியாசம் இருந்தாலும், கல்லூரி கால இளம் ஜோடிகள் போல, காதல் ரசனையுடன், அன்யோன்யமாக குடும்பம் நடத்துகின்றனர். இதுவே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் வயது வித்தியாசம் அதிகம் என்றால், புரிதல் வருவதற்கே மாதங்கள் பல கடந்து விடும். இதில் ஒரு ஷாக்கிங் தகவல் என்னன்னு பார்த்தா, சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க கிராமங்களில் இன்றளவும் மிக அதிக வயதுடைய பெண்ணுக்கும், ஆணுக்கும் கூட திருமணங்கள் நடக்கிறது.
பொதுவாக வயது வித்தியாசம் அதிகம் கொண்ட திருமணங்களில் ஆணுக்கு தான் வயது அதிகமாக இருக்கும். ஆனால் இது ரொம்பவுமே வித்தியாசமானது. 50 வருடங்களுக்கு முன்னர், என் அம்மா வாழ்ந்த கிராமத்தில், மாப்பிள்ளையை மணப்பெண் இடுப்பில் தூக்கிக்கொண்டு, புகுந்த வீடு செல்லும் காட்சியை அடிக்கடி பார்க்க முடியுமாம். இதெல்லாம் இருக்கட்டும், இன்னொரு சுவராஸ்யமும் இருக்கு. ஆணுக்கு வயது அதிகம் என்றால், ஆண் தானே பெண்ணை அடக்கி ஆள்வான் என்று நினைப்போம்.
உண்மையில் நான் கண்டதை வைத்து பார்த்ததில், வயது வித்தியாசம் அதிகம் கொண்ட குடும்பங்களில் பெண் கை கணிசமாக ஓங்கி இருக்கும். அதற்கு ஆணின் முதிர்ச்சியும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் மனதில் வைத்து கொள்ள வேண்டும், எவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் மனைவியை தாம்பத்தியத்தில் திருப்தி அடைய வைக்க வேண்டும். நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். இளம் வயதில், வயதான நபரை திருமணம் செய்து வைத்து, தடம் மாறிப்போன அண்டை வீட்டு பெண்ணின் நிலை எல்லாம் ரொம்ப மோசம். சரியான துணை அமைந்து விட்டால் எல்லா வயதிலும் வாழ்க்கை சந்தோஷமாகவே அமையும். காசுக்கு ஆசைப்பட்டு பாதாளத்தில் விழக்கூடாது.