ஆண்களின் மனதும் ஒரு வயதுக்கு மேல் மீண்டும் குழந்தையாக மாற துவங்கும் என்பார்கள். அதனால், வயதாவதை மறந்து மீண்டும் இல்லறத்தில் சில விஷயத்திற்காக மனைவியிடம் அடம் பிடிப்பார்கள். இது 50, 60 வயதை தாண்டிய பிறகு ஏற்படும் மாற்றம்.
ஆனால், 30களில் இருந்து 40-ல் நடைப்போட்டு கொண்டிருக்கும் போது தான் நீங்கள் வாழ்க்கையை கவனமாக கையாள வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் தவறு செய்தால் அதிலிருந்து வெளிவருவதம், திருத்திக் கொள்வதும் மிகவும் கடினம். முக்கியமாக மனைவியிடம் சில விஷயங்களை அதிகம் எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும்…
எதிர்பார்ப்பு #1 மன்னிப்பு – ஆண்கள் தவறு செய்வதில் வல்லவர்கள். ஆனால், அதை மன்னிக்கும் குணம் பெண்களிடம் எல்லா கட்டத்திலும் இருக்காது. ஒரு வயதுக்கு மேல், தப்பு செய்வதை திருத்திக்கொள்ள தான் வேண்டும். மீண்டும், மீண்டும் தெரிந்தே தப்பு செய்துவிட்டு மனைவி மன்னித்து விடுவாள் என எதிர்பார்க்க கூடாது.
எதிர்பார்ப்பு #2 சேமிப்பு – சேமிப்பு காதலுக்கு வேண்டுமானலும் வேண்டாமல் இருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு, திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் சேமிப்பு தேவை. குழந்தை, குழந்தையின் படிப்பு, மருத்துவ செலவுகள் என சேமிப்பதை விட, சேமிப்பை அக்ரைக்கும் விஷயங்கள் தான் அதிகம்.
எதிர்பார்ப்பு #3 வளர்ப்பு – ஒரு தாயின் கடமை தன் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பது, ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது எனில், ஒரு தந்தையின் கடமை தன் மகனை ஆரோக்கியமாக வளர்ப்பது. இதில், தன் பங்கை குறைத்துக் கொள்வது அல்லது அலட்டல் இல்லாமல் இருந்துவிட்டு, அதை மனைவியிடம் சரிக்கட்ட கூறுவது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கவே கூடாது.
எதிர்பார்ப்பு #4 திட்டமிடுதல் – திட்டமிடுதல் இல்லாத எந்த விஷயமும் வெற்றிப் பெறாது. இது வாழ்விற்கும், இல்லறத்துக்கும் கட்சிதமாக பொருந்தும். ஒரு விஷயத்தை சரியாக திட்டமிடாமல் கோட்டைவிட்ட பிறகு, தன் தோல்வியை மனைவி ஏற்றுக் கொள்வாள் என எதிர்பார்க்க கூடாது. தொடர்ந்து செய்யும் தவறுகளை ஒருபோதும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
எதிர்பார்ப்பு #5 கடன் – கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். இது நூறு சதவீதம் உண்மை. அண்ணன் – தம்பி உறவில் கூட கடன் பகையை வளர்க்கும். எனவே, கடனை அதிகரிக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் எதிர்பார்ப்பு ஆசைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்பு #6 தாம்பத்தியம் – தாம்பத்தியம் என்பது தானாக ஏற்பட வேண்டும். வேண்டும், வேண்டும் என ஒருவரை வற்புறுத்தி ஈடுபடக் கூடாது, முக்கியமாக வயதாக, வயதாக தாம்பத்தியத்தின் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது தான் அழகு. தேவை தான், ஆனால் வயதை கருதி அதன் மீதான அளவை குறைத்துக் கொள்வது நல்லது.
எதிர்பார்ப்பு #7 பொறுப்பு – ஆண்களின் அழகே பொறுப்பு தான். ஒரு ஆண் தான் குடும்பத்தை பொறுப்புடன் நடத்த வேண்டும். உறவு, உணர்வுகள், பணம், வளர்ப்பு என அனைத்திலும் பொறுப்புடன் இருக்க வேண்டும். 30 களுக்கு மேலும் பொறுப்பில்லாமல் இருந்துவிட்டு அதை ஒரு மனைவி சகித்திக் கொள்வாள் என எதிர்பார்க்கவே கூடாது.