சிறந்த பாலியல் உறவுக்கு நேரம் ஒரு பொருட்டே அல்ல; 3 நிமிடம் கூட அதற்கு போதுமானது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நீண்ட நேரம் நீடிப்பதுதான் சிறப்பான பாலியல் உறவு என்று பெரும்பாலான ஆண்கள் நம்புகிறார்கள்.
அவ்வாறு நீடிக்காத உறவால் பலருக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்தப் பின்னணியில் இப்போது வெளியாகியிருக்கும் ஆய்வு முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது.
டாக்டர் எரிக் கோர்ட்டி என்ற அமெரிக்க நிபுணர் தலைமையிலான குழு இந்த ஆய்வை நடத்தியது.
அமெரிக்கர்களும் கனடியர்களும் இதன் மாதிரிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டனர். 7 முதல் 13 நிமிடம் வரை உறவு கொள்வதை “விரும்புவதாக” அவர்கள் கூறினர்.
ஆனால், 3 முதல் 7 நிமிடம் வரையிலான உறவு “போதுமானது” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பெரும்பாலான ஆண்கள் நீண்ட நேரம் உறவு நீடிப்பதை விரும்புகின்றனர். ஆனால், பெண்கள் குறைவான நேரமே போதும் என்கின்றனர்.
இந்த அனுபவத்தை நேரத்தால் அளவிடுவது சரியல்ல என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 3 நிமிடத்துக்கு குறைவான உறவு “ரொம்ப குறைச்சல்”, 7 நிமிடத்துக்கு அதிகமான உறவு “ரொம்ப ஓவர்” என்று மதிப்பிடப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எத்தனை நிமிட உறவு சிறப்பானது என்பதை தீர்மானிக்க இருக்கும் உலகளாவிய ஆய்வின் முதல் கட்டம் இது. மற்ற நாடுகளிலும் இது விரைவில் நடத்தப்பட இருக்கிறது.