27 வயதாகியும் என் காதலி இன்னும் பூப்படையவில்லை!- காரணம் என்ன?
பூப்படையாத பெண்களில் 16 சதவீதம் பேர் சினைப்பை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் சினைப்பையில் இருந்து தான் பெண்மைக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்கும்.
அது சுரந்தால் தான் டீன்ஏஜ் பெண்களுக்கு அந்தரங்கப் பகுதி முடி வளர்ச்சி, மார்பு வளர்ச்சி போன்ற பருவ மாற்றங்கள் தோன்றும். பருவமடைதல் முன்பு, 12 முதல் 14 வயதுகளில் நிகழ்ந்தது. `அமெரிக்கன் கைனக் சொசைட்டி’ தற்போது 8 வயதிலே பெண்கள் பருவமடைந்து விடுவதாக குறிப்பிடுகிறது.
அதற்கு உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் குண்டாகுதல் போன்றவை காரணமாக இருப்பதாக குறிப்பிடுகிறது. இப்போது பெண்கள் பருவமடையும் உலக சராசரி 10 முதல் 12 வயதாக இருக்கிறது. அப்பாவை இழந்த சிறுமிகள் மிகக் குறைந்த வயதிலே பருவமடைந்து விடுவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்.
பதினான்கு வயது வரை பருவ வளர்ச்சி மாற்றங்கள் உடலில் ஏற்படாமல் இருந்தாலும், 15 வயது வரை பூப்படையாமல் இருந்தாலும் பெற்றோர் அந்த சிறுமிகளை டாக்டரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லவேண்டும். மூளையில் கட்டி, சினைப்பையில் கட்டி, பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி ஏதாவது இருந்தாலும் சிறு வயதிலே பெண்கள் பருவமடைந்து விடுவார்கள்.
அதனால் 8 வயதுக்கு முன்பே சிறுமிகள் பருவமடைந்து விட்டால், உடனே டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கருப்பை, சினைப்பை போன்றவை முழுமையாக வளர்ச்சியடைந்திருந்தால் மட்டுமே பெண்கள் பருவமடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
13 வயதுக்கு மேலும் பூப்படைவதில் தாமதம் ஆகும் பிரச்னையும் கூடியிருக்கிறது. உடல் வளர்ச்சிக் கோளாறு, சிறு வயதில் இருந்தே பீடித்திருக்கும் நாள் பட்ட வியாதிகள் அதாவது டிபி, சத்து பற்றாக்குறை போன்றவையும் பூப்படைவதில் தாமதம் ஏற்படக் காரணமாகின்றன. இதே போல் மூளையில் கட்டிகள், பிறவிக் கோளாறுகளும் பூப்படைதலில் ஏற்படும் சிக்கல்களுக்கு காரணமாக உள்ளன. 13 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் பூப்படையாமல் இருந்தால் மகளிர் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.