Home பெண்கள் அழகு குறிப்பு 20+ உங்கள் அழகினை பாதுகாக்க, நீங்கள் கவனிக்க வேண்டியவை

20+ உங்கள் அழகினை பாதுகாக்க, நீங்கள் கவனிக்க வேண்டியவை

24

Capture30 களில் எவ்வாறு 20 வயதினரைப் போல காட்சி அளிக்க வேண்டும் என நினைப்பீர்களோ அதே போல் இருபதுகளில் இருக்கும் பெண்கள்,அந்த வயதிலேயே சருமத்தை பாதுகாத்தால் 30,40களிலும் இளமையான சருமத்தையே பெறலாம். வருமுன் காப்பது நல்லதுதானே.

20+களில் சருமம் சொன்னபடி கேக்கும்.மிகவும் இலகுவாக இல்லாமல், அதே சமயம் முதிர்ச்சி அடையாமலும் இருக்கும். அந்த வய்தினில் உங்கள் சருமத்தை நன்றாக பாதுகாத்தால் அடுதத இருபது வயதுகளில் கவலையில்லை.

எவ்வாறு பராமரிக்கலாம் என்று பாக்கலாம் வாருங்கள்

நீங்கள் 28 வயதிற்கு மேலிருந்தால், இப்போது நீங்கள் தரமான ஆன்டி ஆஜிங்க் க்ரீம் பயன்படுத்தலாம். இது சருமத்தை தொய்வு அடையாமல் காக்கும்.

க்ளென்சர், டோனர் :

நீங்கள் இப்போது தவறாமல் தினமும் க்ளென்சர், டோனர், மாய்ஸ்ரைஸர் பயன்படுத்த வேண்டும். இது உங்கள் சருமத்தை மாசுவிலிருந்து காப்பாற்றும். ஈரப்பததை தக்க வைத்துக் கொள்ளும். இதனால் சுருக்கங்கள் வராது.

சன் ஸ்க்ரீன் லோஷன்:

ஸன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே வெயிலில் போக வேண்டாம். சருமத்தில் வரும் பல பாதிப்புகள் புற ஊதாக்கதிர்களினாலேயே வருகின்றன.ஆகவே வெயிலில் இறங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்னர் சன் ஸ்க்ரீன் லோஷன் முகம்,கை,கழுத்து ஆகிய பகுதிகளில் போட்டுக் கொண்டு செல்லுங்கள்.

மதுபழக்கம்:

மதுப்பழக்கம் கூடவே கூடாது. அது சீக்கிரம் சருமத்தை முதுமையடையச் செயும். ஆகவே ஃப்ரண்ட்ஸ்,பார்ட்டி என்று நண்பர்களுடன் இந்த தீய பழக்கத்தை கற்றுக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகுக்கும் இது பெரிய எதிரி.

மேக்கப்பை தினமும் அகற்ற வேண்டும்:

நீங்கள் அலுவலகம் மற்றும் கல்லூரிக்கும் மேக்கப் போட்டு செல்பவரென்றால், கட்டாயம் அதனை பால் கொண்டு, அல்லது தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அழுக்கு படிந்து சருமம் சீக்கிரம் தொய்வு அடைந்துவிடும்.

சுடு நீர் குளியல் கூடாது:

சுடு நீரில் குளிப்பது சருமத்திலுள்ள சின்ன சின்ன துவாரங்களை சுருக்கச் செய்யும். சருமம் வறண்டு விடும்.இதனால் சீக்கிரம் சருமம் முதிர்ச்சி அடைகிறது. ஆகவே குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சருமத்திற்கு நல்லது.

ஹெல்தியான உணவு :

எல்லா சத்துக்களும் கொண்ட ஹெல்தியான உணவினை உண்ண வேண்டும்.கொழுப்பு மிக்க உணவுகள் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். ஜங்க் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இவை சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளை சுரக்கச் செய்து, முகப்பருவை வரவழைக்கும்.

சன் கிளாஸ் அணியலாம் :

நம் முகத்தில் முதலில் முதுமை அடைவது கண்கள்தான். மிகவும் சென்ஸிடிவான பகுதி என்பதால் சீக்கிரம் தளர்ந்து, வயதான தோற்றம் கொடுத்துவிடும். ஆகவே வெயிலில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்தால் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். கண்களையும் பாதுகாக்கலாம்.

எண்ணெய் குளியல் :

வாரம் இருமுறை எண்ணெய் குளியல் செய்தால் சருமம் புத்துணர்ச்சி பெறும். இதனால் சருமம் அழகாகவும் மினுமினுப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். இவற்றை எல்லாம் ஃபாலோ பண்ணி என்றும் பதினாறாகவே உங்களை வைத்துக் கொள்ளுங்கள்