சீனாவிற்கும் வினோதங்களுக்கும் பஞ்சமே இல்லை. ஆனால், அவர்களது வினோதம் அனைத்தும் பெரும்பாலும் அருவருக்கும் வகையில் தான் இருக்கிறது. உணவுகளில் இருந்து உறவுகள் வரை இதற்கு ஒரு முற்றுப்புள்ளியே இல்லாமல் தொடர்கிறது. சீனாவில் கஷூழோ சிட்டி சென்ட்ரல் மருத்துவமனையில் நடந்த வினோதமான சம்பவம் தான் இது. 12 வயது மனைவியை 40 வயது கணவர் 20 வயது தான் ஆகிறது என சொல்லி கர்ப்ப பரிசோதனைக்கு அழைத்து வந்து, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்று மாத கர்ப்பம்! கணவன் மற்றும் மாமியார் மருமகள் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதால் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளனர். சீரான இடைவேளையில் பரிசோதனைகள் அவசியம், இல்லையேல் கரு வளர்ச்சி பாதிக்கப்படலாம்.
வயதில் குளறுபடி! மனைவியின் உண்மையான வயது 12 தான். ஆனால், இதை வெளியே கூறினால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால், மனைவியின் வயது 20 என கூறி பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார் அந்த சீன கணவன்.
சந்தேகமடைந்த மருத்துவர்கள்! பரிசோதனைக்கு வந்த பெண்ணை கண்டவுடனேயே மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே லோக்கல் போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் வரும் முன்னர் மருத்துவர்கள் அந்த சிறுமியிடம் கேள்விகள் கேட்டு பதில் வாங்க முயற்சித்து தோல்வியுற்றனர்.
கோபமடைந்த கணவர்! போலீஸ் வரும் முன்னர் ஒரு மருத்துவர் ஊழியர் இதை வெளியே கூற, கணவர் கோபமடைந்து. நான் பரிசோதனைக்கு தான் அழைத்து வந்தேன். அந்த வேலையை மட்டும் பாருங்கள் என சண்டையிட ஆரம்பித்துவிட்டார். மேலும், சிறுமியிடம் கேள்வி கேட்கவும் அனுமதிக்கவில்லை.
தகவல் மறைப்பு! 12 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அந்த கணவர் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரது தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சீன அடையாள அட்டை இல்லை! போலீஸ் விசாரணை நடத்திய போது, அந்த பெண்ணிடம் சீன அடையாள அட்டை இல்லாதது தெரிய வந்தது. அவர் தெற்காசிய பகுதியை சேர்ந்த சிறுமி. இன்னும் அவர்எந்த பகுதியை சேர்ந்தவர் என தகவல் தெரியவில்லை. சிறுமியை கடத்தி வந்திருக்கலாம், அல்லது வெளிநாட்டில் இருந்து பெண் எடுத்திருக்கலாம் என அறியப்படுகிறது. சீனாவில் வியட்நாமின் தெற்கு எல்லை பகுதியில் இருந்து பெண்களை திருமணம் செய்து வருவது வழக்கத்தில் இருக்கிறது.