பிரித்தானியாவில் 12வயதில் இருந்து ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையான பாடசாலை மாணவர் ஒருவர் தற்போது அதிகமான மனச்சோர்வுக்கு உள்ளாகியுள்ளார்.
12 வயதில் இருந்து ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியின் ஊடாக ஆபாச படங்களை பார்ப்பதற்கு பழகி பின்னர் அதற்கு அடிமையான அந்தச் சிறுவனுக்கு தற்போது 15 வயது ஆகியுள்ள நிலையில் இதற்காக பல்வேறு ஊக்க மருந்துகளை பயன்படுத்தியுள்ளமை காரணமாக தற்போது அவர் அதிக மனச்சோர்வுக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இது போன்ற சம்பங்கள் நாட்டில் அதிகளவு இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொழில் நுட்பத்தில் மக்கள் நன்மைகளையே அதிகம் பெறுகின்றனர். அதில் உள்ள தீமைகளை பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது அவர்களின் பொறுப்பு என வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.