ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் என அடுத்தடுத்து 11 திருமணங்கள் செய்து அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை வாரிச்சுருட்டிய இளம்பெண் இன்று கைது செய்யப்பட்டார்.
திருமண இணையதளங்களில் உடல் ஊனமுற்றவராக பார்த்து தேர்வு செய்து அவர்களிடம் தனது குடும்பத்தின் ஏழ்மையை போக்கினால் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறுவதுதான் மேக்னா என்ற இளம்பெண்ணின் வழக்கம். இவரது ஆசை வார்த்தைகளில் பலர் மயங்கியுள்ளனர்.
இவர்களில் 11 பேர்களை திருமணம் செய்து அவர்களிடம் ஏதாவது ஒரு காரணத்தை கூறி உடலுறவு கொள்வதையும் தவிர்த்துள்ளார். பின்னர் தனது பெற்றோர்களை சந்தித்து வருவதாக கூறி நகை, பணத்துடன் மாயமாகிவிடுவார்.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த 11வது கணவர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேக்னாவை போலீசார் தேடி வந்தனர். அவர்களுடைய முயற்சிக்கு இன்று பலன் கிடைத்ததௌ. உத்தரபிரதேச மாநிலத்தில் மேக்னா கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து பணம், நகைகள் மீட்கப்பட்டது.