11 பேரை திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து, நகை, பணத்தை கொள்ளையடித்து தலைமறைவாக இருந்த கல்யாணி ராணி உள்ளிட்ட 3 பேரை போலீசார் வலைவரித்துப் பிடித்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டர்120 பகுதியில் பதுங்கி இருந்த ‘கல்யாண ராணி’ பிராச்சி பார்கவ்(வயது28), அவரின் சகோதரர் மேகா பார்கவ்(வயது26), பிராச்சியின்உறவினர் தேவேந்திர சர்மா(வயது30) ஆகியோரை கேரளா, நொய்டா போலீசார் இணைந்து தீவிர முயற்சிக்குப்பின் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த லோரன் ஜஸ்டின் என்பவர் சமீபத்தில் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக புகார் அளித்தார். அதில் தனது மனைவி தன்வீட்டில் இருந்த ரூ.15 லட்சம், நகைகளுடன் தலைமறைவாகிவிட்டார் என்று தெரிவித்து இருந்தார்.
கேரள மாநிலத்தில் இதுபோல் 5-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்து இருப்பதால், தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் அந்த பெண் கேரளவில் இதுபோல், 7 பேரையும், நொய்டாவில் 4 பேரையும் ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதை விசாரணையில் அறிந்தனர். இதையடுத்து, உத்தரப்பிரதேசம் நொய்டா போலீசாரின் உதவியுடன், பிராச்சி, பார்கவ், அவரின் சகோதரர் மேகா பார்கவ், உறவினர் தேவேந்திர சர்மா ஆகியோரை கைது செய்தனர்.
இது குறித்து நொய்டா மாவட்ட போலீஸ் சூப்பிரென்டு தினேஷ் யாதவ் கூறுகையில், “ கைது செய்யப்பட்ட பிராச்சி பார்கவ் கேரள மாநிலத்தில் 11 பேரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். வயது மூத்தவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோரைத் தேடிக்கண்டுபிடித்து, அவர்களைபிராச்சி திருமணம் செய்வார்.
அவருடன் 4 முதல்த 5 நாட்கள் குடும்பம் நடத்தி உல்லாசமாக இருந்துவிட்டு, பால், உணவில் ஏதாவது மயக்க மருந்து கலந்து கொண்டு, வீட்டில் உள்ள பணம், நகைகளுடன் தப்பிவிடுவார்.
பாதிக்கப்பட்டவர்கள்,மனைவி ஓடிவிட்டால். இதைவெளியே தெரிந்தால் அசிங்கம் என்று வெளியை கூறாமல் அமைதியாக இருந்துவிடுவார்கள். இதைப் பயன்படுத்தியே 11 பேரை திருமணம் செய்துள்ளார்.
பிராச்சியின் சொந்த ஊர் இந்தூர் ஆகும். இதுபோல் வடமாநிலங்களில் பலரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். கேரள மாநில போலீசார் பிராச்சியையும், அவரின் சகோதரர், உறவினரையும் காவலில் எடுத்து விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர்” என்றார்.