பெண்களில் ஜில்-ஜங்-ஜக் என மூன்று முக்கிய பிரிவுகள் இருப்பதை வடிவேலு கூறினாலும். அதன் உட்பிரிவுகள் பத்து வகைகள் இருக்கின்றன.
நல்ல குணம் இருந்தாலும் சிடுமூஞ்சியாக இருக்கும் பெண்கள், திட்டித்தீர்த்தாலும், நல்லதை மட்டுமே செய்யும் பெண்கள், டேட்டிங் செய்து காதலிப்பவர்கள், டேட்டிங் செல்ல மட்டும் காதலிப்பவர்கள் என இந்த பட்டியல் நீள்கிறது.
அப்படின்னா பொண்ணுக மட்டும் தான் இப்படியா, பசங்க என்ன ரொம்ப யோக்கியமா என்ன? என்று சீர வேண்டாம். பொண்ணுங்க லோக்கல்-னா, பசங்க தர லோக்கல்.. அம்புட்டு தான் வித்தியாசம். இனி, ஜில், ஜங், ஜக் மட்டுமில்லாம, அதையும் தாண்டி இருக்க பத்து வகையான பொண்ணுங்கள பத்தி பாக்கலாம்…
ஆத்மார்த்தமாக காதலிப்பவர்கள்
எது செய்தலும், என்ன செய்தாலும், அது உங்களுக்கு பயன் ஏற்படும் வகையில் இருக்க வேண்டும் என விரும்பும் பெண்கள். இவர்கள் மெழுகையே மிஞ்சி உருகி காதலிப்பவர்கள். இந்த மாதிரியான பெண் கிடைத்தால், மறு நாளே தாலிக்கட்டி மனைவி ஆக்கிக் கொள்ளுங்கள், இந்த காலத்தில் இவர்கள் கிடைப்பது மிகவும் அரிது
சிடுமூஞ்சி
ஆண்களை பார்த்தாலே, அல்லது ஆண்கள் இவர்களை பார்த்தாலே, அவன் ஒரு பொருக்கி, ஃப்ளர்ட், என குறை கூற ஆரம்பிக்கும் குணாதிசயங்கள் இருக்கும் பெண்கள். இவர்களை காதலிப்பதும், கல்லை கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதும் ஒன்று தான்.
மீண்டும், மீண்டும் பிரேக் – அப்
காதலை ஏதோ சூப்பர் மேரியோ கேம் போல, மீண்டும் மீண்டும் விளையாடும் பெண்கள். காதல் தோல்வியில் மனமுடைந்து, சில நாள் அழுது தீர்த்துவிட்டு, அவன் தான் அழ வேண்டும், நான் ஏன் இனி அழ வேண்டும் என தங்களது அடுத்த பயணத்திற்கு தயாராகும் பெண்கள். (பொண்ணுக மட்டுமா, பசங்களும் இப்படி தாங்க… நமக்கு ஆயிரம் பிகரு மடியும் மச்சி..)
நெறிமுறைகளுடன் வாழும் பெண்கள்
இந்த நேரத்தில் இது தான் செய்ய வேண்டும், இந்த காலத்தில் தான் இவற்றை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என பக்காவாக சிலபல நெறிமுறைகளுடன் வாழும் பெண்கள். இவர்கள் தங்களை ப்ராக்டிகல் என கூறிக்கொள்கின்றனர்.
டேட்டிங் பறவைகள்
ச்சே.. ச்சே… காதல் எல்லாம் சரிப்பட்டு வராது, டேட்டிங் ட்ரை பண்ணலாம், புடிச்சா ஒண்ணா இருக்கலாம், இல்லாட்டி பிரிஞ்சிடலாம் என ஓகே கண்மணியின் முதல் பாதி கதையை மட்டும் ஓட்டும் பெண்கள்
குழந்தைத்தனமான பெண்கள்
இவர்களை கையாள்வது கொஞ்சம் கடினம். இவர்களது பிளஸ், மைனஸ், எல்லாமே இவர்களது குழந்தைத்தனம் தான். ஆரம்பத்தில் இதை பிடித்து ஆண்கள் விரும்புவர்கள். ஆனால், முக்கியமான தருணங்களில் கூட இவர்கள் குழந்தைத்தனமாக நடந்துக்கொள்வது சண்டைகள் ஏற்பட காரணமாகிவிடும். ஆயினும், இப்படி ஓர் மனைவி கிடைப்பது அரிது, இவர்களும் ஆத்மார்த்தமாக காதலிப்பவர்கள் தான். ஆனால், வெளிபடுத்த தெரியாது.
அய்யோ, லவ்வா….!!!
காதலிக்கலாமா? வேண்டாமா? என ஆழமாக யோசித்து, கடைசியில் சரி காதலிக்கலாம் என முடிவெடுத்து. ஒரு சில மாதங்களில் மொக்கை காரணங்களை சுட்டிக்காட்டி நாம் பிரிந்துவிடலாம் என முடிவெடுத்து, மீண்டும் சிங்கள் தான் பெஸ்ட் என தம்பட்டம் அடிக்கும் பெண்கள்.
தனிமையிலே இனிமை காணும் பறவைகள்
நட்பு தான் பெஸ்ட் எப்பவுமே, லவ்வெல்லாம் வேண்டாம், வீணா ரிஸ்க் எடுக்கணும். இப்படியே நட்பா இருந்துக்கலாம் என இருக்கும் பெண்கள். இவர்கள் தங்களது சுதந்திரம் பறிபோய்விடும் என அஞ்சியே தனியாக வாழ்கின்றனர். (என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே-ம்மா….)
ஜாதகம், ஐதீகம் மற்றும் பல
அப்பா, அம்மா பேச்சைக்கேட்டு, பத்து பொருத்தமும், பக்காவாக இருந்தால் மட்டுமே, நம்பி கழுத்தை நீட்டும் அக்மார்க் குடும்பத்து பெண்கள். (இவங்க எல்லாம் எங்கையோ மூலையில இருக்கிறதுனால தான் அப்பப்போ மழை வருதுன்னு சொல்றாங்க…)