Home ஜல்சா 10-ல் ஒரு பெண்ணின் அந்தரங்க படங்கள் சமூக தளங்களில் லீக் ஆகிறது

10-ல் ஒரு பெண்ணின் அந்தரங்க படங்கள் சமூக தளங்களில் லீக் ஆகிறது

39

இன்றைய உறவுகளில் இருக்கும் காதல், அரசியல் வாதிகளின் வாக்குறுதிகள் போல, மாறிக் கொண்டே இருக்கிறது, எளிதாக மறந்து விடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போது சரியான நேரம் கிடைக்கும், வாரிவிடலாம் என கழுகு போல காத்திருக்கிறார்கள். ஒரு உறவில் கருத்துவேறுபாடு அல்லது ஏதேனும் தவறான காரணத்தால் பிரிந்துவிட்டீர்கள் என்றால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுவது இருவர் வாழ்விலும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும்…

#1 சமீபத்திய சர்வே ஒன்றில், தனது முன்னாள் துணை அல்லது காதலியின் அந்தரங்கள் படங்களை வெளியிடும் ரிவஞ் பார்ன் எனப்படும் குற்ற செயலால் பாதிக்கப்படுவது 90% பெண்கள் தான் என அறியப்பட்டுள்ளது. இந்த குற்றத்தால் ஆண்கள் மிகவும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றனர்.

#2 ஒரு உறவில் இருந்து பிரிந்த பிறகு தனது முன்னாள் துணையின் அந்தரங்க படங்களை சமூக தளங்களில் பகிர்வது பிளாக் மெயில் செய்யும் செயலாக பின்பற்றுகின்றனர்.

#3 தனது துணையை பழிவாங்க குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் ரகசிய கேமரா மாட்டுவது குற்ற செயல் ஆகும். இதை ஒருவர் சாதாரணமாக செய்தாலே குற்றம் தான். #4 இந்த ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில், தன்னை பிரிந்து அந்த துணை நிம்மதியாக வாழ்கிறார் என அறியும் போது தான் பலர் ஈடுபடுகிறார்கள்.

#5 சமீபத்திய ஆய்வில், உறவில் பிரிவை சந்தித்த பத்தில் ஒருவர் துணையின் அந்தரங்க படங்கள், வீடியோவை லீக் செய்து விடுவேன் என மிரட்டி ரிவஞ் பார்ன் எனும் குற்ற செயலில் ஈடுபடுவது அறியப்பட்டுள்ளது.

#6 இந்த செயலால், மன ரீதியாக வலுவாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அனால், இந்த செயல்களில் ஈடுப்படுவது கிரிமினல் குற்ற செயலுக்கு கீழ் வருகிறது என்பதை பலரும் அறிவதில்லை.