Home சமையல் குறிப்புகள் ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

24

Spring Rollsஸ்வீட் கார்ன் – ஒன்றரை கப்
ரவா – ஒரு கப்
துருவிய சீஸ் – அரை கப்
வெங்காயம் – ஒன்று
கொத்தமல்லித் தழை – சிறிது
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
சில்லி தூள் – ஒரு தேக்கரண்டி
சாட் மசாலா – ஒரு தேக்கரண்டி
பால் – 2 கப்
மைதா – 2 தேக்கரண்டி
ப்ரெட் க்ரம்ஸ் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
ரவையை வறுத்தெடுத்து பால் ஊற்றி நன்கு கெட்டியாகும் வரை வேகவிடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கார்ன், சீஸ், கரம் மசாலா தூள், சாட் மசாலா, சில்லி தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள கார்ன் கலவையை எடுத்து உருட்டி (ரோல் போல) மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுக்கவும்.
பிறகு ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
இதேபோல் மீதமுள்ள கலவையிலும் ரோல்ஸைத் தயார் செய்து, மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து, ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டியெடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ரோல்ஸைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.