இந்த ஸ்பைசியான மட்டன் மசாலா சாப்பிட்டீர்கள் என்றால் அப்படியே சொக்கி போய்விடுவீர்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
மட்டன் – 500 கிராம் ( மார்பு பகுதி மற்றும் தொடை பகுதி)
இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- 22
தக்காளி -1 ( பொடியாக நறுக்கியது)
தேங்காய் பால் -1 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
முந்திரி பருப்பு – 18
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
வரமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் -2 டீஸ்பூன்
குரு மிளகு தூள்- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
செய்முறை
முந்திரி பருப்பை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைகள் கொஞ்சமாக சேர்த்து நன்றாக 3 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக மசிந்து கூழ் போல் ஆகும் வரை வதக்க வேண்டும்.
மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லி தூள், குரு மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் சுத்தம் செது வைத்துள்ள மட்டனை சேர்க்கவும்.
பின்னர், 1 1/2 கப் தேங்காய் பால் ஊற்றி குக்கரின் மூடியை மூடி நன்றாக கறி வேகும் வரை விசில் விட்டு இறக்கவும்.
ஊற வைத்த முந்திரி பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
கறி நன்றாக வெந்தவுடன் குக்கரை திறந்து இந்த முந்திரி பருப்பு விழுதை சேர்த்து அடுப்பின் தீயை குறைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
கொஞ்சம் குழம்பு திக்கானதும் இறக்கி பரிமாறவும்.