Home சூடான செய்திகள் ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?

ஷங்கர் படத்தில் விக்ரம் ஜோடி தீபிகா?

39

ஷங்கர் தன் அடுத்த பட வேலையைத் தொடங்கிவிட்டார் என்ற செய்தி வெளியானதுதான் தாமதம்… அதற்குள் அந்தப் படத்தில் சூர்யா நடிக்கிறார், அஜீத் நடிக்கிறார் என ஆளாளுக்கு தகவல்கள்.

இப்போது வதந்தி மையம் கொண்டிருப்பது விக்ரம் மீது.

இவர்தான் ஷங்கரின் ஹீரோ என்று முடிவே செய்துவிட்ட மீடியா, அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதாக செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளது.

ஆனால் தீபிகாவுக்கு இது ஒரு செய்தி என்ற அளவில்தான் தெரியுமாம். ஷங்கரோ வேறு யாருமோ கூட அவருடன் பேசவில்லையாம்.

ஷங்கர் தரப்பில் விசாரித்த போது, “ஸ்க்ரிப்ட் ஒர்க் மட்டும்தான் இப்போது நடக்கிறது. இந்தப் படத்தின் ஹீரோ யார் என்பது ஷங்கர் ஒருவருக்குத்தான் தெரியும். தன் உதவியாளர்களிடம் கூட இதுகுறித்து அவர் எதுவும் பேசவில்லை. அதற்குள் விக்ரம் என முடிவு செய்து, அவருக்கு தீபிகாவை ஜோடியாகவும் ஆக்கியிருப்பது டூ டூ மச்…,” என்றனர்.

இப்போதைக்கு ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்கிறார் தீபிகா. ராணா படம் தொடங்கினால் அதிலும் அவர்தான் ஜோடி!