அக்காலத்தில் எல்லாம் பெண்கள் தங்களின் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற மஞ்சள் பூசிக் குளிப்பார்கள். ஆனால் தற்போதைய நவீனமயமான காலத்தில் மஞ்சள் பூசி குளிக்கும் பழக்கம் போய், சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற வேக்சிங் முறையைப் பின்பற்றுகின்றனர். ஏனெனில் மஞ்சள் பூசிக் குளித்தால், உடனே முடி நீங்காது. அதுவே வேக்சிங் செய்தால், எளிதில் உடனே நீக்கிவிடவாம் என்பதால் தான். ஆனால் வேக்சிங் செய்வதால், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும்.
இதனைத் தவிர்க்க வேண்டுமானால், வேக்சிங் செய்த பின்னர் அவ்விடத்தில் அரிப்பு, எரிச்சலைத் தணிக்கும் படியானதை தடவ வேண்டும். இங்கு வேக்சிங் செய்த பின்னர், அவ்விடத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைத் தணிக்க வீட்டின் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். சரி, இப்போது வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்கள்!!!
ஐஸ் தண்ணீர்/ஐஸ் கட்டி
வேக்சிங் செய்த பின்னர், அவ்விடத்தில் குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டியைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தால், அவ்விடத்தில் உள்ள எரிச்சல் நீங்குவதோடு, அரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும்.
கற்றாழை ஜெல்
உங்கள் வீட்டில் கற்றாழை செடி இருந்தால், அதன் ஜெல்லை வாக்சிங் செய்த இடத்தில் தடவினால், அவ்விடத்தில் உள்ள எரிச்சல் தணிக்கப்பட்டு, அரிப்பும் நீங்கும். மேலும் கடைகளில் விற்கப்படும் வாக்சிங் செய்த பின்னர் தடவும் ஜெல்லில் கூட கற்றாழை முக்கியமான பொருளாக சேர்க்கப்பட்டுள்ளது.
டீ-ட்ரீ ஆயில்
வாக்சிங்கிற்கு பின் சருமத்தை இதமாக்க டீ-ட்ரீ ஆயில் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு டீ-ட்ரீ ஆயிலை நீரில் கலந்து தடவ வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக சருமம் வறட்சி அடையாமல் இருக்கும்.
ரோஸ் வாட்டர்
உங்களுக்கு வறட்சியான சருமம் என்றால் வாக்சிங் செய்த பின்னர் விரைவில் உலர்ந்துவிடும். அப்போது ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவினால், மென்மையான மற்றும் அரிப்பில்லாத சருமத்தைப் பெறலாம்.
டீ பேக்
டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை வாக்சிங் செய்த இடத்தில் தடவினால், எரிச்சல், அரிப்பு நீங்கும்.
பவுடர் அல்லது எண்ணெய்
நீங்கள் மென்மையான வாக்சிங் முறையை மேற்கொண்டிருந்தால், அதனால் சிவப்பாக மாறும் சருமத்தை சரிசெய்ய பவுடர் அல்லது எண்ணெய் தடவிக் கொள்வது நல்லது.