பெண்களுக்கு வரக்கூடிய பல நோய்களில் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும். பெண்களின் பிறப்புறுப்பின் வழியே ‘சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும்.
இதை வெள்ளைப்போக்கு, வெட்டை என்று சொல்வார்கள். இதைப் பல பெண்கள் கவனிக்காமலும், வெளியில் சொல்ல வெட்கப்பட்டும் விட்டு விடுவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டு விட்டால் இனவிருத்தி உறுப்புகளின் ஒரு பகுதியையோ அல்லது பல பகுதியையோ பாதித்து தீவிரமான நோய்களுக்கு அடிப்படையாக மாறி விடும்.
இரத்த சோகை..? ரத்த சோகையால் அவதிப்படும் பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் இருக்கும். ரத்த சோகையை சரிசெய்து விட்டால் தானாக நின்றுவிடும்.
உள்ளாடைகள்.. இறுக்கமான, குறிப்பாக செயற்கை இழை உள்ளாடைகள் உடுத்துவதாலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். ‘டீனியா’ என்ற வகை பூஞ்சைக் காளானாலும் வெள்ளைப்படும்.
கருவுறுதல் பிரச்சனை வெள்ளைப்படுதல் பிரச்சனையானது பெண்களுக்கு கறுவுறுதல் பிரச்சனை உண்டாக காரணமாக அமைகிறது.. மேலும் நாள்ப்பட்ட வெள்ளைப்படுதலை சரி செய்யாமல் விட்டால் அது புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.
1. மணத்தக்காளி 1 கட்டு அளவு மணத்தக்காளி இலைகளை எடுத்து அதனுடன் 5 சின்ன வெங்காயம், 5 பூண்டு பல், சிறிதளவு சீரகம் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து கொதித்ததும் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கலந்து மீண்டும் கொதிக்க வைத்து சூப் போல செய்து அடிக்கடி குடித்து வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.
2. சங்குப்பூ சங்குப்பூ கொடியின் வேரைப் பாலில் நன்றாக அவித்து பிறகு பால் ஊற்றி அரைத்து சிறிது காலை, மாலை பாலில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகியவை குறையும்.
3. வெந்தயம் வெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
4. வாழைப்பழம் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.
5. இஞ்சி ஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்னையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.
6. கொய்யா இலை பத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.
7. மாதுளை தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வருவது கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு, ஒரு கைப்பிடியளவு மாதுளை இலைகளை அரைத்து இரண்டு கிளாஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொண்டு, அதனுடன் மிளகுப்பொடியைச் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வரவும்.
8. வெண்டைக்காய் 4 வெண்டைக்காயை எடுத்துக் கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும். வெண்டைக்காய் வேக வைத்த தண்ணீர் மிகவும் வழவழப்பாக இருக்குமாதலால், சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
9. திரிபலா சூரணம் சிறிது கடுக்காய் நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து ( திரிபலா சூரணம்) அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.
10. லோத்ரா பட்டை லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.
11. குளிந்த நீரில் கழுவவும் மிகவும் குளிர்ந்த நீரில் 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.
12. அன்னாசி பழம் அன்னாச்சி பழத்தை எடுத்து தோல் சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குறையும்.