Home பாலியல் வெள்ளைப்படுதல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

வெள்ளைப்படுதல் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

23

காரணங்கள் (Causes)

உள் இனப்பெருக்க மண்டலத்திற்கும் வெளி உறுப்புகளுக்குமான நுழைவாயிலாக பெண்ணுறுப்பு உள்ளது. பெண்ணுறுப்பு இயல்பாக அமிலத்தன்மை கொண்டது, இதில் பெண்ணுறுப்பைப் பாதுகாக்கின்ற நுண்ணுயிர்த் தொகுதிகள் உள்ளன. பெண்ணுறுப்பு தன்னைத் தானே சுத்தப்படுத்திக்கொள்வதற்காகவே இந்தத் திரவத்தை வெளியேற்றுகிறது. பெண்ணுறுப்பில் இருந்து இத்திரவம் வெளியேறும் சமநிலை பாதிக்கப்பட்டால் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும்.

பெண்களுக்கு எப்போதும் இப்படி வெள்ளைப் படும். மாதவிடாய், கர்ப்பம், மன அழுத்தம், உணவு, மருந்துகள், போன்றவையும் வெள்ளைப்படுதலில் மாற்றங்கள் ஏற்படக் காரணமாகலாம்.

அழற்சி ஏற்பட்டு வெள்ளைப்படும்போது, திரவம் கெட்டியாகவும் துர்நாற்றத்துடனும் இருக்கும். பெண்ணுறுப்பில் வீக்கமும் அடைபட்டதுபோன்ற உணர்வும் இருக்கும். பால்வினை நோய்கள் அல்லது குழந்தை பிறப்புக்குப் பிறகு பெண்ணுறுப்பில் சுரக்கும் சுரப்பு நீரினாலும் வெள்ளைப்படலாம்.

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு வெள்ளைப் படுவது அதிகமாக இருக்கலாம். ஹார்மோன் சமநிலையின்மை, இரத்த சோகை, சுத்தமில்லாத பழக்கங்கள் போன்றவையும் வெள்ளைப்படுவதற்குக் காரணமாகலாம்.

அறிகுறிகள் (Symptoms)

வெள்ளைப்படுதல் என்பது நோயல்ல, அதுவே ஓர் அறிகுறிதான். உயிரியல் செயல்பாட்டில் உருவாகும் மஞ்சள்-வெள்ளை நிறம் கொண்ட திரவங்களே வெள்ளைப்படும்போது வெளியேறுகின்றன. பெண்களின் வாழ்வில் அனைத்துக் கட்டங்களிலும் சாதாரணமான இந்த வெள்ளைப்படுதல் இருக்கும்.

வெள்ளைப்படும்போது வெளியேறும் திரவம் பச்சையாக, பால் போன்ற வெண்மையாக, துர்நாற்றம் கொண்டதாக அல்லது மீன் வாடை கொண்டதாக இருந்தால் அது பால்வினை நோயின் அறிகுறியாகவோ நோய்த்தொற்றின் அறிகுறியாகவோ இருக்கலாம்.

நோய் கண்டறிதல் (Diagnosis)

பெண்ணுறுப்பின் வெளி இதழ்கள், பிறப்புறுப்பு, கருப்பை வாய்ப்பகுதி ஆகியவற்றை மருத்துவர் ஆய்வு செய்வார். வழக்கத்திற்கு மாறான திரவங்கள் வெளிவந்தால் அல்லது துர்நாற்றம் இருந்தால் மேலும் சில பரிசோதனைகள் செய்யப்படலாம். அவற்றில் சில:

வெளியேறும் திரவத்தின் சிறு பகுதி டார்க் ஃபீல்டு மைக்ரோஸ்கோப் கொண்டு ஆய்வு செய்யப்படும்
பெண்ணுறுப்பின் pH சோதனை
சில சமயம் கல்ச்சர் சோதனை செய்யப்படலாம்
திசுப் பரிசோதனை
சிகிச்சை (Treatment)

வெள்ளைப்படும்போது திரவம் வழக்கத்திற்கு மாறான தன்மை கொண்டிருந்தால் அல்லது பால்வினை நோய்கள் இருந்தால், காரணத்தைப் பொறுத்து சிகிச்சை தேர்வு செய்யப்படும். சுத்தமான பழக்கங்களைப் பின்பற்றுதல், பாக்டீரிய எதிர்ப்பு மருந்துகள் அல்லது பூஞ்சான் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை பரிந்துரைக்கப்படலாம்.

மாவுச்சத்துள்ள உணவுகளை விட புரதங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளுதல், யோகர்ட் (லாக்டோபேசில்லஸ் பாக்டீரியாக்களை சேர்த்துக்கொள்வதற்காக), வைட்டமின் C மற்றும் E சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

தடுத்தல் (Prevention)

இதனைத் தடுக்க சில குறிப்புகள்:

சுத்தமாக இருப்பதே பல்வேறு நோய்த்தொற்றுகளைத் தடுக்க முதல் படியாகும்
அதிக நீர் பருகுவதும் ஆரோக்கியமான உணவுப்பழகத்தைப் பின்பற்றுவதும் அவசியம்
பெர்ஃபியூம் போன்ற வாசனைப் பொருள்களை, பெண்ணுறுப்புப் பகுதியில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
பால்வினை நோய்களைத் தடுக்க, பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடவும்
இனப்பெருக்க உறுப்புகளில் வழவழப்புக் கூட்டும் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
சிக்கல்கள் (Complications)

வெள்ளைப்படும் திரவத்தில் வழக்கத்திற்கு மாறான வாடையோ நிறமோ இருந்தால், அது யீஸ்ட் நோய்த்தொற்று போன்ற பால்வினை நோய்கள் அல்லது பிற நோய்த்தொற்றுகளின் அறிகுறியாக இருக்கலாம்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

வெள்ளைப்படும்போது வழக்கத்திற்கு மாறான நிறமோ வாடையோ இருந்தால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும்.