வெர்ச்சுவல் ரியாலிட்டி என்ற புதிய தொழில்நுட்பத்தில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து கடந்த 2016ஆம் ஆண்டில் 10,000 சதவீதமாக அதிகரித்து இருப்பதாக கூகுள் நடத்திய ஆய்வில் ஒன்றில் தெரிய வந்துள்ளது. தற்போது, வீட்டில் இருக்கும் தங்களது லேப்டாப் மற்றும் செல்போன்களில் மட்டும் ஆபாசப் படங்களை பார்த்து வருகின்றனர். தற்போது விஆர் தொழில்நுட்பத்திற்கு தாவி வருகின்றனர். இது படங்களை பல மடங்கு அதிகரித்து, அதே நேரத்தில் காட்சிகளை அருகில் பார்ப்பது போல் இருக்கும்.
இதற்கென சந்தைகளில் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஹெச்டிசி விவி மற்றும் ஆக்லஸ் ரிப்ட் ஆகிய ஹெட் செட்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தில் பலரும் ஆபாசப் படங்களை பார்த்து வருகின்றனர். இதையடுத்து தற்போது விஆர் தொழிநுட்பத்தில் ஆபாசப் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி நார்வே, ஹாங்காங், சிங்கப்பூர், பின்லாந்து, தென் கொரியா, சுவீடன், மலேசியா ஆகிய நாடுகளில் ஆபாசப் படங்களை பார்த்து வருகின்றனர்.