Home ஆரோக்கியம் வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்

வெயில் காலத்தில் வரும் நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு இயற்கை மருத்தும்

28

Captureவெயில் காலங்களில் உடல் சூடு அதிகரிப்பது வழக்கமானது. உடலுக்கு குளிர்ச்சியான பழரசம், இளநீர், மோர் போன்ற திரவ ஆகாரங்களை சாப்பிட்டு அதை சரி செய்கிறோம்.

சிலர் தண்ணீர் அதிகம் குடிக்காமல், வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிகின்றனர். இதனால் நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்பட்டு அவஸ்தை படுகின்றனர். இதை போக்க எளிமையான வைத்தியம் உண்டு.

ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.

அப்படி சாப்பிட்டால் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் வெப்பக்கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவினால், வெகுவிரைவில் கட்டிகள் மறைந்து நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும். வெப்பம் சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் வராது.