கோதுமை ரவை – கால் கிலோ,
பட்டாணி – 50 கிராம்,
வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சை மிளகாய் – தலா ஒன்று,
பீன்ஸ் – 4,
கடுகு – கால் டீஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* வெங்காயம், இஞ்சி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கோதுமை ரவையை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும்.
* கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
* எல்லாம் ஒன்றாகக் கலந்து மணம் வந்ததும், ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு தண்ணீர் விடவும். அது, கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி பிடிக்காமல் கிளறவும்.
* வெந்ததும் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
* சுவையான சத்தான வெஜிடபிள் கோதுமை ரவா உப்புமா ரெடி.