படுக்கை அறையில் உறங்கும் போது எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவேண்டும். தம்பதியரில் யார் ஒருவர் குறட்டை விட்டாலும் இருவருக்குமே உறக்கம் பாதிக்கும். அது உறவில் கூட விரிசலை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
குறட்டைதானே என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் குறட்டை என்பது விவாகரத்து வரை கொண்டு சென்றுள்ளதாம். எனவே குறட்டையை தவிர்க்க நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
உறங்கும் போது குறட்டை வந்தால் பொசிசனை மாற்றிப்படுங்கள். சுவாசத்தை பாதிக்காத உணவுகளை உட்கொள்ளுங்கள். இரவில் உறங்கும் முன் உட்கொள்ளப்படும் உணவும் கூட குறட்டையை தீர்மானிக்கிறதாம் எனவே சரியான சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்.
வாழ்க்கைத்துணைவர் குறட்டை பார்ட்டி என்று தெரிந்தால் அதனை தீர்க்கும் வழிமுறைகளைத்தான் பார்க்க வேண்டுமே தவிர நள்ளிரவில் எழுந்து சத்தம் போட்டு சண்டை போடக்கூடாது.
படுக்கைக்குச் செல்லும்போது புகைப்பிடித்தல் உள்ளிட்ட கெட்டப்பழக்கங்களை தவிர்த்து விடுமாறு ஆலோசனை கூறுங்கள். அதுவே குறட்டை ஏற்படாமல் தடுக்கும். குறட்டையை தவிர்க்க மருத்துவரை ஆலோசனை செய்யுங்கள்.
குறட்டை ஏற்படாமல் தடுக்க மூக்கில் மாட்டிக்கொள்வதற்கு என உள்ள ஸ்டிரிப் மாட்டிக்கொள்ளுங்கள் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் தொந்தரவில்லாத உறக்கத்தை ஏற்படுத்தும். அப்புறம் படுக்கை அறையில் ரொமான்சும் அதிகரிக்கும்.