Home ஆரோக்கியம் வியர்வை மற்றும் உடல் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்

வியர்வை மற்றும் உடல் துர்நாற்றத்தைப் போக்கும் வழிகள்

22

இளம் வயது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உடலில் பல மாறுதல்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு அதிகம் வியர்க்கும். இது குறித்து அவர்கள் அதிகம் கவலைப்படுவார்கள். ஆனால், இது பெரியவர்களாக மாறும் வயதில் எல்லோருக்கும் நடக்கும் ஒரு சகஜமான மாற்றம் தான்.

வியர்வை (Sweating)
வியர்வை என்பது எல்லோருக்கும் நடக்கும் ஒரு உடல் நிகழ்வாகும். தட்பவெப்பநிலை சூடாக இருக்கும்போதும், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடும்போதும், பரபரப்பாக இருக்கும்போதும் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்காக நிகழும் ஒரு இயற்கையான பதில்வினை தான் வியர்த்தல் என்பது. உடல் வியர்ப்பதைத் தடுக்க முடியாது.

பூப்படையும்போது, வியர்வைச் சுரப்பிகள் அதிகமாகச் செயல்பட்டு, வியர்வையுடன் சேர்த்து பல்வேறு இரசாயனங்களையும் வெளியிடும். அவை அதிக துர்நாற்றம் கொண்டவையாக இருக்கலாம்.
உடல் துர்நாற்றம் (Body odour)
பெரும்பாலும் உடல் துர்நாற்றத்திற்குக் காரணம், வியர்வையுடன் பாக்டீரியா வினைபுரிவதே. அக்குள், பாதம், உள்ளங்கை மற்றும் இனப்பெருக்க உறுப்புப் பகுதிகள் போன்ற இடங்களில் இந்த துர்நாற்றம் நன்கு தெரியும்.
உடல் துர்நாற்றத்தைத் தடுக்கும் வழிகள் (Ways to prevent body odour)
தினமும் குளித்தால், இந்த துர்நாற்றத்திற்குக் காரணமாக இருக்கும் பாக்டீரியாக்கள் நீங்கும். குளிக்க, மென்மையான சோப்பையும் நீரையும் பயன்படுத்தவும்.

தினமும் சுத்தமான உடை, உள்ளாடை, சாக்ஸ் போன்றவற்றை அணிவது நீங்கள் சுத்தமாக இருக்க உதவும்.
நீங்கள் அதிகம் வியர்ப்பவராக இருந்தால், வியர்வையை நன்கு உறிஞ்சிக்கொள்ளும் காட்டன் போன்ற இயற்கை ஆடைகளை அணிவது மிகவும் உதவியாக இருக்கும்.
அக்குள் துர்நாற்றம் தான் உங்கள் பெருங்கவலை என்றால், ஆன்டிபெர்ஸ்பிரன்ட்ஸ் அல்லது டியோடரன்ட் பயன்படுத்தலாம். டியோடரன்ட்டுகள் வியர்வையின் நாற்றத்தை மறைக்கும், ஆன்டிபெர்ஸ்பிரன்ட்ஸ் வியர்வையை உலர்த்தி, வியர்வை இல்லாமல் பார்த்துக்கொள்ளும். டியோடரன்ட்டுகளும் ஆன்டிபெர்ஸ்பிரன்ட்சும் ஸ்டிக், ஸ்ப்ரே, ரோல்-ஆன், பவுடர், ஜெல் போன்ற பல வடிவங்களில் கிடைக்கின்றன.

சுத்தமாக இருப்பதும், நீர் மற்றும் சோப்பு கொண்டு பாக்டீரியாக்களை அகற்றுவதுமே மிகச்சிறந்த முறை.
பாதத்தில் துர்நாற்றம் ஏற்படுவதைத் தடுக்க, ஆன்டிஃபங்கல் ஸ்ப்ரே அல்லது மருந்து கலந்த ஃபுட் பவுடர்களைப் பயன்படுத்தவும்.