Home சூடான செய்திகள் விபத்தில் சிக்குவோருக்கு உதவ மோகன்லால் புதிய ஏற்பாடு!

விபத்தில் சிக்குவோருக்கு உதவ மோகன்லால் புதிய ஏற்பாடு!

32

விபத்தில் சிக்குபவர்கள், நோயாளிகளுக்கு உதவ நடிகர் மோகன்லால் புதிய ஏற்பாடு ஒன்றினைச் செய்துள்ளார்.

இதற்காகவே இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ள மோகன்லால், தொண்டு நிறுவனங்கள் சிலவற்றோடும் இதற்காக கைகோர்த்துள்ளார்.

இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவர்களுக்கு ரத்தம் வேண்டுமாமானாலும் மோகன்லாலின் இந்த வெப்சைட் மூலம் தொடர்பு கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., இ-மெயில், டெலிபோன் மூலமும் தொடர்பு கொள்ளலாம். கட்டணம் கிடையாது. ரத்தம் கொடுக்க விரும்புபவர்களும் இப்படி தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணையதள முகவரி www.jipmer-edu.in ஆகும்.

இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், “ரத்ததானத்துக்கு உதவும்படி எனக்கு பல வருடங்களாக எஸ்.எம்.எஸ்.கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அவசரமாக ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் இந்த வெப்சைட்டை துவங்கி உள்ளேன்,” என்றார்.