விந்து முந்துதல் (premature ejaculation) என்பது ஒரு ஆண் தனது பாலியல் துணை விரும்புவதற்கு முன்னோ அல்லது தானே விரும்பும் முன்னோ விந்துவை வெளித்தள்ளுதல் ஆகும்.
வரையறை
மேற்கண்ட வரையறையில் இவ்வளவு நேரத்திற்கு முன்னமே விந்து வெளிவருதல் என்பது போன்ற திட்டவட்டம் எதுவும் இல்லை. ஓருவர் 10 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார். அவரின் பாலியல் துணை 20 நிமிடத்தில் உச்சநிலை அடைகிறார் என்றும் கொண்டால் இது விந்து முந்துதல் ஆகும். இதே 10 நிமிடத்தில் இன்னொருவர் உச்ச நிலை அடைவதாகவும் ஆனால் அவரின் பாலியல் துணை 8 நிமிடங்களுக்குள்ளாகவுமே உச்சநிலை அடைவதாகவும் கொண்டால் இது விந்து முந்துதல் அன்று.
பத்துப் பேரில் ஒருவர் (1/10) என்ற விகிதத்தில் மிகப் பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் எதுவென்றால் அது விந்து முந்துதல்தான்.
விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature Ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.
உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்கிறோம்.
ஆண்மைக் குறைபாடு அல்லது விறைப்படுவதில் Erectile dysfunction சிக்கலுக்கான காரணங்கள் இவை. விந்து முந்துதலுக்கான Premature ejaculation காரணங்கள் பிறகு கட்டுரையில் சொல்லப்படுகிறது
விந்து முந்துதல் Premature ejaculation என்பது
ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல.
இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் எவ்வித பிரச்சனையும் இருப்பதில்லை. விறைப்படுவதில் குறைபாடானது Erectile dysfunction எனப்படும்
பாலுறவின் நாட்டத்திலும் குறைவிருப்பதில்லை.
யாரைப் பாதிக்கும்
பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. பாலியல் உணர்வுகள் அதிகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் பருவத்தில் பலரையும் பாதிக்கிறது.
காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டு வர பல ஆண்களால் முடிகிறது.
இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.
உசிதமான நேரம் எவ்வளவு? ஆய்வு முடிவுகள்
உச்ச கட்டத்தை அடைவதற்கு எந்தளவு நேரம் உசிதமானது என்பதைப் பற்றி சரியான தகவல்கள் இல்லை. இருந்தபோதும் 2006 ல் சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம் பொதுவாக
விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.
எவ்வித பிரச்சனையும் இல்லை, சாதாரணமாக வெளியேறுகிறது எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை விந்து வெளியேறாது உறவில் ஈடுபட முடிந்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து விரைவில் வெளியேறிவிடுவதாகக் கவலைப்பட்டதுண்டு.
2.5 சதவிகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது.
எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும்?
எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.
இருந்தபோதும் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும் உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள்.
பலவற்றையும் கருத்தில் எடுக்கும்போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித்தால் நேரக் கணக்குகளைவிட திருப்தியடையும் உணர்வு முக்கியம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம் சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதினால் அங்கு விந்து முந்துதல் இருப்பதாகக் கருதலாம்.
காரணங்கள் என்ன?
இது ஏற்படுவதற்குக் காரணம. என்ன? ஒருவன் தனது பாலியல் உறவுகளின் ஆரம்ப கட்டங்களில் இதற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள்.
மற்றவர்கள் கண்டு கொள்வார்களோ என்ற பதற்றமான சூழ்நிலைகளில் பயத்துடனும் அவசர அவசரமாகவும் உறவு கொண்டவர்களின் ஆரம்ப கால அனுபவங்களின் தொடர்ச்சியாக இது நேர்ந்திருக்கலாம்.
காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவு கொண்டு விந்நை வெளியேற்றிய நிகழ்வுகளால் பதனப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்துதல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
மற்றொரு காரணம் இது பரம்பரையில் வருவதாகவும் இருக்கலாம். விந்து முந்தியவரகள் பலரது தகப்பன்மாருக்கும் இது இருந்தது தெரிய வந்தது.
மனப்பதற்றம் முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. மனப் பதற்றம் பதகளிப்பு ஆகியவை விந்து விரைந்து வெளியேறக் காரணமாகின்றன.
உடலுறவு என்பது உணர்வுகளோடு தொடர்புடையன. மனக் கிளர்ச்சி அதற்கு அவசியம். ஆனால் சஞ்சலமும், கவலையும் உறுப்புகளை சோரவும் ஈரலிப்பின்றி வரட்சியாகவும் ஆக்கும், அதே நேரம் பதகளிப்பு முந்தச் செய்துவிடலாம்.
இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள்.