Home ஆண்கள் விந்து திறனை எவை எல்லாம் கொல்கிறது? எவை எல்லாம் வளர்க்கிறது? என தெரியுமா?

விந்து திறனை எவை எல்லாம் கொல்கிறது? எவை எல்லாம் வளர்க்கிறது? என தெரியுமா?

78

எந்தந்த செயல்கள் ஆண்களின் விந்து திறனை மேலோங்க செய்கிறது, மடிய செய்கிறது என்பது குறித்து ஓர் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்த சதவீத பட்டியல் பற்றி இங்கு காணலாம்… 169% – ஆர்கானிக் காய்கறிகள், இலை தாவரங்கள் உண்பதால் ஆண்களின் விந்து திறன் 169% மேலோங்குகிறது. 61% – உணவு அல்லது டயட்டில் மிகவும் குறைவான அளவு ட்ரான்ஸ் கொழுப்பு சேர்த்துக் கொள்வதால் 61% வரை மேலோங்குகிறது. 52% – டிவி, லேப்டாப், கம்பியூட்டர், ஸ்மார்ட் போன் போன்றவற்றை குறைவாக பயன்படுத்துவதால் 52% விந்து திறன் மேலோங்கும். 51% – வாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவதால் ஆண்களின் விந்து திறன் 51% வரை உயரும்.

38% – தினமும் கருசீரகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் 38% வரை விந்து திறன் மேம்படும். -5% – உயரத்திற்கு ஏற்ற உடல் எடை அளவுகோல் எனப்படும் பி.எம்.ஐ 25-30 வரை இருப்பவர்களுக்கு விந்தணு திறன் -5% குறைவாக இருக்கிறது. -10% – எண்ணெயில் ஃப்ரை செய்த உணவுகள் அதிகம் சாப்பிடுவோர் மத்தியில் விந்தணு திறன் -10% குறைவாக இருக்கிறது. -21% – தினமும் ஐந்து சிகரட் புகைக்கும் நபர்கள் மத்தியில் விந்து திறன் -21% குறைவாக இருக்கிறது. -22% – இடுப்பு சுற்றளவு 40 இன்சு அதற்கும் மேல் இருக்கும் ஆண்கள் மத்தியில் விந்து திறன் -22% குறைவாக இருக்கிறது. -25% – தூக்கமின்மை அல்லது தினமும் லேட்டாக உறங்கும் நபர்கள், சரியான நேரத்திற்கு உறங்காமல் இருக்கும் நபர்கள் மத்தியில் விந்தணு திறன் -25% குறைவாக இருக்கிறது. -61% – எதற்கு எடுத்தாலும் பதட்டம், மன அழுத்தம் கொள்ளும் நபர்கள் மத்தியில் விந்தணு அதிகபட்சமாக -61% திறன் குறைவு காணப்படுகிறது.