Home பாலியல் விந்துதள்ளல் மற்றும் உச்சக்கட்ட இன்பம்

விந்துதள்ளல் மற்றும் உச்சக்கட்ட இன்பம்

70

12-1452593027-6-romanceஉடலுறவு என்பது அற்புதமான உணர்வை அனுபவிக்கக்கூடிய அதே சமயம் சவால் நிறைந்த ஒன்றும் கூட. ஏனெனில் உடலுறவில் ஈடுபடும் போது தம்பதிகள் ஒருவரை ஒருவர் ஆனந்தக்கடலில் குதூகலமாக நீச்சலடிக்க வைப்பதற்கு பல ட்ரிக்ஸ்களை கையாள வேண்டியிருக்கும்.

ஆனால் அனைவருமே அனைத்து நேரங்களிலும் உடலுறவில் ஈடுபடும் போது உச்சக்கட்ட இன்பத்தை அடைவார்கள் என்று கூற முடியாது. குறிப்பாக இதில் பெண்கள் தான் அதிகமாக பொய் கூறுவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

அந்த வகையில் ஆண்கள் அடையும் உச்சக்கட்ட இன்பம் குறித்து நீங்கள் அறிந்திராத சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விந்துதள்ளல் மற்றும் உச்சக்கட்ட இன்பம் எப்போதும் ஒன்றாக நடக்காது – ஆம், இது உண்மையே. எப்போதுமே விந்து தள்ளலும், உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிப்பது என்பதும் ஒரே சமயத்தில் நடைபெறாது. வேண்டுமானால் நன்கு கவனித்துப் பாருங்கள்.

புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் – ஆய்வுகளில் அடிக்கடி உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கும் ஆண்கள் ஆரோக்கியமாகவும், அவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

JAMA என்னும் பத்திரிக்கையில், ஒரு மாதத்தில் 20 முறைக்கு மேல் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கும் ஆண்களுக்கு, 4-5 முறை இன்பத்தை அனுபவிக்கும் ஆண்களை விட புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாக வெளிவந்தது.

உடலுறவினால் அடையும் உச்சக்கட்ட இன்பம் நன்றாக இருக்கும் – சுய இன்பத்தினால் அனுபவிக்கும் சந்தோஷத்தை விட, துணையுடன் உடலுறவில் ஈடுபடும் போது அடையும் உச்சக்கட்ட இன்பம் தான் அற்புதமான சந்தோஷத்தையும், உணர்வையும் தரும்.

உச்சக்கட்ட இன்பம் தலைவலியை சரிசெய்யும் – தலைவலி கடுமையாக இருக்கும் போது மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, துணையுடன் உடலுறவில் ஈடுபட்டால் உடலில் சுரக்கப்படும் குறிப்பிட்ட ஹார்மோன்கள் தலைவலியை உடனடியாக சரிசெய்யும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்களேன்.

பொய்யான இன்பத்தை வெளிப்படுத்துதல் – பெண்கள் மட்டும் தான் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தது போல் நடிப்பார்கள் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் ஆண்களும் பொய்யான இன்பத்தை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள்.

பொய்யான இன்பத்தை வெளிப்படுத்துதல் – 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், உடலுறவில் ஈடுபடும் போது 25 சதவீத ஆண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடைந்தது போல் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணமாக தன் துணை வருத்தப்படக்கூடாது என்பதற்காக என்றும் கூறுகின்றனராம்.

ஆண்களால் பலமுறை உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியும் – ஒருமுறை உறவில் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அடைந்த பின் ஓர் ஆண் மீண்டும் உறவில் ஈடுபட 30 நிமிடங்கள் போதும். அதற்கு அவர்கள் தங்களது மூளையை போதுமான அளவு பயிற்சி அளிப்பதன் மூலம், ஒரே இரவில் பலமுறை உறவில் ஈடுபட்டு உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க முடியும்.