Home ஆண்கள் விந்தணுக்கள் குறைவதற்கான காரணங்களும்!, அதை அதிகரிப்பதற்கான வழிகளும்!

விந்தணுக்கள் குறைவதற்கான காரணங்களும்!, அதை அதிகரிப்பதற்கான வழிகளும்!

25

பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தியானது இருப்பதில்லை. விந்தணுவின் உற்பத்தியைப் பொறுத்தே கரு உருவாதல் அடங்கி இருக்கிறது. கரு உருவதலில் ஆண், பெண் என இருவருக்கும் சமபங்கு இருக்கிறது. ஆண்களுக்கு விந்தணு வின் எண்ணிக்கையே பொறுத்து தான், அவர்கள் மலட்டுத்தன்மை உள்ளவரா அல்லது கரு உருவக்க கூடியவரா என்பதை தீர்மானிக்கி றது. ஆனால் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல்வேறு காரண ங்களால் விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கை பாதிக்கப்படலாம். எனவே இத்தகைய விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொ ரு ஆண்களும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்களில் குறைவான விந்து எண்ணிக்கை மலட்டுத்தன்மை ஏற் படுவதில் முக்கியமான காரணம் ஆகும். ஆகவே விந்து எண்ணிக் கையை அதிகப்படுத்த எந்த உணவு களை சேர்க்க வேண்டும், எந்த பழக் கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று ஒருசிலவற்றைத் தொகுத்து ள்ளோம். அதைப்படித்து பின்பற்றினால், விந்தணுவின் எண்ணிக்கை யை அதிக படுத்தி, மலட்டுத்தன்மையை போக்கலாம்.
விந்து எண்ணிக்கை குறைவதற்கான காரண ங்கள்!
ஜிங்க் குறைபாடு
உடலில் போதிய ஜிங்க் சத்து இல்லாவிட்டா ல், விந்தணுவின் உற்பத்தியில் பாதிப்பு ஏற் படும்.
அதிகப்படியாக புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
அனைத்து ஆண்களுக்கும் இருக்கும் ஒரு பொதுவாக கெட்ட பழக்கங்க ளில் ஒன்று தான் சிகரெட் மற்றும் மது அருந்துதல். இத்தகைய செயலால் தற்காலிகமா ன சந்தோஷம் கிடைக்குமே தவிர, நாளடைவில் விந்தணுவின் எண்ணிக்கையில் குறைபாட்டை ஏற்படு த்திவிடும்.
இறுக்கமான உள்ளாடை
தொடர்ச்சியாக இறுக்கமான உள்ளாடையை அணிந்தால், மலட்டுத் தன்மை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
அதிகமான உடல் எடை
இன்றைய நவீன உலகில் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற உண வுகள்தான் கடைகளில் கிடைக்கின்றன. இத்தகைய உணவுகளில் சுவை அதிகம் இருந்தாலும், இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்புக்கள் அதிகரித்து, உடல் எடை அதிகரித்துவிடும். பின் திரும ணத்திற்கு பின் விந்தணு குறைபாட்டால் அவஸ்தைப்பட வேண்டியது தான்.
மன அழுத்தம்
தற்போது நிறைய மக்கள் மன அழுத்தத் தால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு மன அழுத்தம் ஏற்பட்டால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதோடு, விந்தணு வின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.
விந்து கோளாறு (Sperm disorder)
விந்தணு கோளாறுகள்கூட விந்தணு எண்ணிக்கை, விந்தணுவின் தரம் மற்றும் இயக்கத்தை பாதிக்கும். விந் தணு சரியாக வெளியேறாவிடில், அதன் இயக்கம் கட்டுப்பாடில்லாமல் தலைகீழாகி விடும். சொல்லப்போ னால் விந்தணு கோளாறுகள், விந்த ணுவின் வடிவத்தைகூட மாற்றி விடக்கூடும். அதிலும் விந்து வெளியேறாமல் இருத்தல், மலட்டுத் தன் மை, விறைக்காமல் இருத்தல் அல்லது சீக்கிரமாக விந்து வெளியேறு தல்கூட, தாம்பத்திய த்தின் போதும் கரு உருவாதலிலும் பிரச்சனைக ளை உண்டாக்கும்.
விந்தணுவைப் பற்றிய உண்மை!!!
இயல்பான விந்து எண்ணிக்கை
ஒவ்வொரு விந்தணு வெளியேற்றத்தின் போதும் 1 முதல் 5 மி.லிட்டர் வரையில் மாறுபடுகி ன்றன. மேலும் விந்து எண்ணிக்கை ஒரு மி.மீ.க்கு 20-150 மில்லியன் வரையிலாக மாறுபடுகின்றன. அதில் 60 சதவிகித விந்தணுக்களாவது சரியான வடி வம் பெற்று, முன்னோக்கி ஊர்ந்து செல்லும் திறன் பெற்றிருக்கும். விந்து எண்ணிகையை அதிகரிக்கும் சத்துக்கள்!!!
வைட்டமின் பி உணவுகள்
வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலா டை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்க ள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக் கும். விந்து எண்ணிகையை அதிகரிக்கும் சத்துக்கள்!!!
ஜிங்க் உணவுகள்
ஜிங்க் உணவுகளான கடல் சிப்பிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதை கள், இஞ்சி, கோதுமை, இறைச்சி, டார்க் சாக்லேட், தர் பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவது, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும்.
விந்து எண்ணிகையை அதிகரிக்கும் சத்துக்கள்!!!
செலினியம் உணவுகள் (Selenium)
செலினியம் நிறைந்துள்ள உணவுகளான மட்டி (Shellfish), ஈரல், மீன், சூரியகாந்தி விதைகள், நண்டுகள், இறால்கள், கடல் நண்டுகள், அரிசி, கோதுமை, ஓட்ஸ் போ ன்ற தானியங்கள் விந்தணு குறைபாட் டைத் தடுக்கும்.
விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரி க்கும் வழிகள்!!!
சுய இன்பம்
அடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்ளுதலை தவிர்க் கவும்.
ஆரோக்கியமற்ற உணவுகள்
ஃபாஸ்ட் புட், ஜங்க் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வும்.
மன அழுத்தத்தைப் போக்க யோகா
மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம் படுத்த தினமும் யோகா செய்யவும்.
போதிய தூக்கம்
தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும்.
உடற்பயிற்சி
ஹார்மோன்களைச் சமப்படுத்த, தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும்.
அடிக்கடி நடக்கவும்
அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே நிலை யில் உட்காராமல், அவ்வப்போது நடக்க வேண்டும்.
மசாஜ்
உடலில் இரத்த ஓட்டத்தை சரிப்படுத்த, உடலுக்கு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து கொள்ளவும்.