Home ஆரோக்கியம் வாய் துர்நாற்றத்தை இவ்வளவு ஈஸியாகூட சரிசெய்ய முடியும்…

வாய் துர்நாற்றத்தை இவ்வளவு ஈஸியாகூட சரிசெய்ய முடியும்…

48

நாம் என்னதான் நல்ல தரமான பேஸ்ட் கொண்டு, பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போன்று இன்னும் பலரும் வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் நீங்கள் பல் டாக்டரைப் பார்க்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது. வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு, நீங்களே மௌத் வாஷ் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் மௌத் வாஷ்களால் உங்கள் வாய் துர்நாற்றத்தைப் போக்க முடியும்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 1
பேக்கிங் சோடா – 2 ஸ்பூன்
பட்டை தூள் – 1 ஸ்பூன்
தேன் – 2 ஸ்பூன்
வெந்நீர் – 1 கப்

செய்முறை

ஒரு பாட்டிலில் தேன், எலுமிச்சை சாறு, பட்டைப்பொடி ஆகியவற்றைச் சேர்ந்து நன்கு கலக்கி, அதனுடன் வெந்நீரைச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மௌத் வாஷை தினமும் காலை மற்றும் இரவு தூங்கும் முன் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, வாயில் இரண்டு நிமிடற்கள் வைத்து நன்கு கொப்பளிக்க வேண்டும்.

இதனால் வாயில் துர்நாற்றம் போவதோடு, பாக்டீரியா தொற்றுக்கள் ஏதும் உண்டாகாமலும் இருக்கும்.