Home குழந்தை நலம் வளரும் குழந்தைகள்

வளரும் குழந்தைகள்

28

1. முதல் வாரம்: உங்கள் குரலை அடையாளம் தெரிந்துகொள்ளும். நீங்கள் பேசுவது புரியாவிட்டாலும் உங்கள் குரலை கேட்டு அமைதி அடையும்.
2. இரண்டாவது வாரம்: ஓன்று முதல் இரண்டு அடி தூரம் வரையுள்ள பொருட்களை கூர்ந்து பார்க்க ஆரம்பிக்கும். பாலூட்டும்போது உங்கள் தலையை மெல்ல இரண்டு பக்கமும் அசைத்தால் குழந்தையின் கண்களும் அசைவதை பார்க்கலாம். (இந்த மாதிரி அடிக்கடி செய்வது குழந்தைகளின் கண் தசைகளுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.)
3. மூன்றாவது வாரம்: குழந்தையின் அசைவுகள் இன்னும் கட்டுப்பாடற்று இருந்தாலும் இந்த வாரத்தில் குழந்தை தனது அசைவுகளை கட்டுபடுத்தி கொள்ளும். நீங்கள் குழந்தையை தூக்கும் போது எப்படி வசதியாக மாறிகொள்கிறது என்று பாருங்கள்.
4. நான்காவது வாரம்: அழுவதற்கு மட்டுமே பயன்படுத்திய குரல்வளையை இந்த வாரத்திலிருந்து புதிய ஓசைகளை எழுப்ப பயன்படுத்தும். குறிப்பாக அம்மா அப்பா இவர்களை பார்த்ததும் புதிதுபுதிதாக ஓசை எழுப்ப ஆரம்பிக்கும். நீங்கள் பேசுவதை உங்கள் குழந்தை ஒப்போலி செய்கிறது! நீங்கள் இந்த ஓசைக்கு பதில் கொடுத்தால் குழந்தை தனது குரலுக்கு மதிப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும்.
5. ஐந்தாவது வாரம்: இப்போது குழந்தைகளின் அசைவு நல்ல கட்டுப்பாடில் வந்துவிடும். மெல்ல குழந்தையை உட்கார வைத்து பழக்குங்கள். ( அனால் எப்போதும் குழந்தையின் தலையை தாங்கி பிடித்து கொள்ளுங்கள்)
6. ஆறாவது வாரம்: சிரிப்பதற்கு முயற்சி செய்யும். பதிலுக்கு நீங்களும் சிரித்தால் சந்தோஷப்படும்.
7. ஏழாவது வாரம்: கிலுகிலுப்பை போன்ற விளையாட்டு பொருட்களை ஆர்வமுடன் பார்க்க ஆரப்பிக்கும். இந்த பொம்மையிலிருந்து வரும் சத்தத்தை ஆர்வமுடன் கவனிக்கும். வர்ணங்களை தெரிந்துகொள்ளும்.
8. எட்டாவது வாரம்: கழுத்து தசை பலபட்டிருக்கும். தலையை 45 டிகிரி வரை உயர்த்த முயற்சி செய்யும். குழந்தையை குப்புற படுக்கவைத்து பொம்மைகளை முன்புறம் வையுங்கள். குழந்தை முன்புறம் அசைய முயற்சிசெய்யும்.
9. ஒன்பதாவது வாரம்: இசையின் ஓசை குறிப்பாக அதிகபடியான சத்தத்தை உங்கள் குழந்தையை ரசிக்க ஆரம்பிக்கும். நீங்கள் பேசும்போது உங்கள் வாய் அசைவை கவனமாக பார்க்கும். மழலை மொழியில் உங்களுக்கு விதவிதமான பதில் கிடைக்கும்.
10. பத்தாவது வாரம்: கூட்டத்தில் உங்களை அடையாளம் தெரிந்து கொள்ளும். தெரிந்த முகம் ஓன்று வரும்போது உங்கள் குழந்தையின் முகம் பிரகாஷம் அடையும். வீட்டு வேலைகள் செய்யும்போது குழந்தையை கூடவே வைத்திருங்கள். சாப்பிடும்போது சமையல் செய்யும்போது உங்கள் கூட இருப்பதற்கு குழந்தை ஆசைபடும்.