Home ஆரோக்கியம் வறண்ட தொண்டையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு

வறண்ட தொண்டையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு

20

d9647813-e27f-43a5-b91d-b53393eddb0a_S_secvpfகுளிர் காலம் அல்லது இளவேனிற் காலத்தில் ஏற்படக் கூடிய பொதுவான ஒரு பிரச்சனை தான் வறண்ட தொண்டை.

தொண்டைப் புண்ணால் அவஸ்தை

இந்த நிலை சில நேரங்களில் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அல்லது விழுங்குவதில் கஷ்டத்தை உண்டாக்கும்.

வறண்ட தொண்டை ஏற்படுவதற்கு பல நேரங்களில் காரணமாக இருப்பது வைரல் தொற்று அல்லது வறண்ட காற்றாகும்.

இதுப்போக தூங்கும் போது வாயால் சுவாசிப்பதாலும், புகைப்பிடிப்பதாலும் கூட இது ஏற்படும்.

அதிர்ஷ்டவசமாக, வறண்ட தொண்டை என்பது மோசமான நிலை அல்ல. சில சிறந்த வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றினால் யாருக்கு வேண்டுமானாலும் இது எளிதில் குணமாகிவிடும்.

இந்த சிகிச்சைகள் இதன் தீவிரத்தை குறைப்பதோடு, எந்த ஒரு மருத்துவ ஆலோசனை இல்லாமலும் வறண்ட தொண்டைக்கான அறிகுறிகள் ஏற்படுவதையும் கட்டுப்படுத்தும்.

இரவில் ஏற்படும் மூக்கடைப்பிற்கான சில எளிய வைத்தியங்கள்

இருப்பினும் உங்களுக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது இந்த சிகிச்சைகளை பின்பற்றியும் கூட ஏதேனும் அறிகுறிகள் நீடித்து நிலைத்தாலோ, உடனே மருத்துவரை சந்தித்து மருத்துவ அறிவுரையை பெறுவது அவசியமாகும்.
வறண்ட தொண்டைக்கான சில வீட்டு சிகிச்சைகளை
தேனை எடுத்துக் கொள்ளுங்கள்

வறண்ட தொண்டைக்கு சிகிச்சை அளித்திட இது ஒரு சிறந்த சிகிச்சையாக விளங்கும்.

பல உடல்நல வல்லுனர்களின் கருத்து படி, தேன் என்பது இயற்கையான முறையில் குணப்படுத்தும் என்ஸைம்களால் நிறைந்ததாகும். மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் குணங்கள் அடங்கியுள்ளது.

இது தொண்டைக்கு இதமளிப்பதோடு, இருமலை தூண்டும் காரணிகளையும் போக்கும். சிறந்த பலனைப் பெற அதனை அப்படியே சாப்பிடுவது நல்லது. அப்படி இல்லையென்றால் அதில் எலுமிச்சை ஜூஸை பிழிந்து, தேவைப்படும் போது அதிலிருந்து 1 ஸ்பூன் குடியுங்கள்.
மூலிகை தேநீர் பருகுங்கள்

வறண்ட தொண்டைக்கான பழமையான சிகிச்சைகளில் ஒன்று தான் மூலிகை தேநீர் பருகுவது. இந்த தேநீரில் இயற்கையான முறையில் குணப்படுத்தும் என்ஸைம்கள் நிறைந்திருக்கிறது.

இது தொண்டை வறட்சியை போக்கும். சூடான தேநீரை பருகும் போது அதிலுள்ள வெப்பம், என்ஸைம்களை காற்று பாதைக்குள் நுழையச் செய்யும். அதற்கு இந்த தேநீரை தயாரிக்க, சூட்டை தாங்கும் கப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சூடான தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை 60 நொடிகளுக்கு அப்படியே விட்டு விடுங்கள். இப்போது இதில் கொஞ்சம் தேனையும் சற்று எலுமிச்சையையும் பிழிந்து கொள்ளுங்கள். தேனில் கிருமிநாசினி குணங்கள் நிறைந்துள்ளது. அதனால் தொண்டையை சுற்றியுள்ள எரிச்சல் குறையும். இந்த தேநீரை நீங்கள் மெதுவாக பருகலாம்.
ஆரஞ்சு ஜூஸ்

இந்த பானம் எலக்ட்ரோலைட்ஸ்களை திருப்பி கொடுக்கும். இது போக வறண்ட வாய்க்கு ஈரப்பதத்தையும் அளிக்கும். ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் கொஞ்சம் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு ஜூஸை ஒரு டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளவும். உங்கள் தொண்டைக்கு ஈரப்பதத்தை அளிக்க கடைகளில் விற்கும் விலை உயர்ந்த பானங்களை வாங்குவதற்கு பதில் இந்த பானத்தை பருக வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.