புண் என்பது உடலின் எந்த ஒரு இடத்திலும் தொடர் சதையினில் பாதிப்பினை ஏற்படுத்தவது.
* தோலில் ஏற்படும் புண்
* `பெட் சோர்’ எனப்படும் நெடும் நாட்கள் படுக்கையில் அதிக அசைவின்றி இருப்பவர்களுக்கு அழுத்தத்தின் காரணமாக ஏற்படுவது.
* பிறப்புறுப்புகளில் ஏற்படும் புண்
* வாயின் உள்ளே ஏற்படும் புண்
* உதடுகளின் ஓரத்தில் ஏற்படும் புண்
* வயிற்றில் புண்
* குடல் புண் என இன்னும் சில பிரிவுகளை இதன் கீழ் சேர்க்க முடியும். இதில் நாம் வயிற்றுப் புண்ணைப் பற்றி பார்ப்போம். `பெட்டிக் அல்சர்’ எனப்படும் இவ்வகையில்
* எரியும் வலி இதன் முக்கிய அறிகுறி
* தொப்பிலிருந்து மார்பு எலும்பு வரை பரவும்.
* வயிறு காலியாய் இருந்தால் வலி மிகவும் அதிகரிக்கும்.
* இரவில் அதிகரிக்கும்.
* ஏதாவது உணவு உட்கொண்டாலும் ஆசிட் குறைக்கும் மருந்து எடுத்துக் கொண்டாலும் வலி குறையும். இது தற்காலிக நிவாரணமே.
* திடீர் திடீர் என தோன்றும்
* சில நேரங்களில் வாந்தியில் ரத்த கசிவு சிகப்பாகவோ, கறுப்பாகவோ இருக்கும்.
* வெளிப்போக்கு கறுப்பு நிறத்தில் இருக்கும்.
* எடை குறைவு ஏற்படும்.
* வயிற்று பிரட்டல், வாந்தி இருக்கும்.
* வயிறு உப்பியும் இருக்கக் கூடும். சிறு குடலின் முன் பகுதியில் ஏற்படும் புண்ணும், வயிற்றில் ஏற்படும் புண்ணிற்கும் பல அறிகுறிகள் ஒரு போலவே இருக்கும். வலி ஏற்படும் விதத்தில் வித்தியாசம் இருக்கும்.
சிறு குடலில் ஏற்படும் வலி சாப்பிட்டு சில நேரம் கழித்து ஏற்படும் வயிற்றில் ஏற்படும் புண் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஏற்படும். அமைதியான புண்களும் ஏற்படுவது உண்டு. இதில் எந்த அறிகுறிகளும் தெரியாது. இதுபோன்ற பாதிப்பு
* வயதானவர்
* சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்
* அதிக வலி மாத்திரைகள் உட்கொள்பவர் ஆகியோருக்கு ஏற்படும். குழந்தைகளையும், இள வயதினரையும் பாதிக்கக்கூடியதே. பொதுவில் இந்த பாதிப்பு டென்ஷன், உணவு பழக்க முறை காரணமாய் ஏற்படுகின்றது எனினும் ஹெச்.பைலோரி என்ற கிருமி தாக்குதலினாலும் ஏற்படுகின்றது. உடனடியாக கண்டு பிடித்து சிகிச்சை தருவதே இதற்கு முழு நிவாரணத்தைத் தரும்.
சரி இந்த வயிற்றுப் புண், குடல் புண் எவ்வளவு ஆபத்தானது?
பொதுவில் இது ஆறக் கூடியதே என்றாலும்
* ரத்தக் கசிவு
* வயிற்றில் புண்ணினால் ஒட்டை விழுந்து விடுதல்
* வயிற்று, குடல் பகுதியில் அடைப்பு, வீக்கம் ஏற்படுதல் போன்றவை ஆபத்தானவை.
* பரம்பரை
* அதிக சிகரெட்
* மது
* 50 வயத்திற்கு மேல்
* வலி மாத்திரைகள்
* ஹெச்பைலோரி கிருமி போன்றவை வயிற்று குடல் புண்ணுக்கு காரணமானவை. மருத்துவ பரிசோதனை மிகவும் அவசியம்.
பாதிப்பிற்கு தகுந்தவாறு சிகிச்சை அவசியம்.