Home பெண்கள் தாய்மை நலம் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் தென்படும் அறிகுறிகள்

வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் தென்படும் அறிகுறிகள்

26

download (1)கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு, தன் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும். இருப்பினும் நம் நாட்டில் பெண் சிசுக் கொலை நடப்பதால், வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று பார்க்க நம் அரசு தடை செய்துள்ளது. இருந்தாலும், நம் முன்னோர்கள் அக்காலத்தில் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கணித்தனர்.
இவை மூடநம்பிக்கையாக இருந்தாலும், பெரும்பாலானோருக்கு முன்னோர்களின் கணிப்பு படி நடந்துள்ளது. இங்கு அந்த அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து, உங்கள் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆண் குழந்தை இருந்தால் தென்படும் அறிகுறிகள்
* வயிற்றில் ஆண் குழந்தை என்றால், மேல் வயிறு பெரிதாகவும், கீழ் வயிறு சற்று சிறியதாகவும் இருக்கும்.
* கர்ப்பிணிகளின் சிறுநீரின் நிறமானது அடர் நிறமாக இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
* கர்ப்பமாக இருக்கும் போது முகப்பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்பிணிகளின் வயிறு சிறியதாக காணப்பட்டால், வயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்து வருகிறது என்று அர்த்தம்.
* வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கூந்தல் வளர்ச்சி அதிகம் இருக்கும்.
* கர்ப்பிணிகளுக்கு புளிப்பான மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளின் மீது ஆசை எழுந்தால், அதுவும் ஆண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்று.
* எவ்வளவு தான் க்ரீம்கள், எண்ணெய்கள் என்று சருமத்திற்கு தடவினாலும், சருமம் அதிகம் வறட்சி அடைய ஆரம்பித்தால், அதுவும் ஆண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.