நடனம் என்பது உடலுக்கு உற்சாகம் தரக்கூடிய சிறந்த உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வயதானலும், நோய் பாதிப்புகள் இருந்தாலும் உற்சாகமான நடனமாடுவது மனதையும், உடலையும் உற்சாகப் படுத்தி இளமையை மீட்டுத்தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
மன உளைச்சல் நீங்கும்
நடனமாடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்கிறது. இசையோடு கூடிய நடனம் மன அழுத்தத்தை போக்குவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறாதாம். நடனமாடுவதன் மூலம் உருவாகும் உற்சாக அலைகள் டென்சனை நீக்கி மன உளைச்சலை போக்குகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
வயதானவர்களுக்கு நடனம்
வயதானவர்கள் நடனமாடுவது அவர்களை இளமையாக நினைக்கத் தூண்டுகிறதாம். எனவே உற்சாகமாக நடனமாடுங்கள் இளமை திரும்பும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். நடனமானது ஸ்டாமினாவை அதிகரிக்கிறது.
அல்சீமர் குணமாகும்
நடனமாடுவதால் உடல் இளைக்கிறது. ரத்த அழுத்தம் குறைக்கிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகிறது என்கின்றனர் நிபுணர்கள். அல்லீமர் நோய்க்கு ஆளானவர்களை நடனமாடச் செய்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடனமாடுவதன் மூலம் பாதங்கள், கால் தசைகள் உறுதியாகிறது.
சர்க்கரை நோய் குணமாகும்
நடனம் ஆடினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். முதல்கட்ட ஆய்வில் வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது நீரிழிவு நோய் பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது தெரிய வந்தது. அதோடு, அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.
மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. இதனால் மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.