Home சூடான செய்திகள் ரொமான்ஸ் அதிகரிக்க வேண்டுமா?: பின்பற்ற வேண்டிய சில பெட்ரூம் கட்டளைகள்

ரொமான்ஸ் அதிகரிக்க வேண்டுமா?: பின்பற்ற வேண்டிய சில பெட்ரூம் கட்டளைகள்

34

11-1365681474-food31-600வீடுகளில் உள்ள அறைகளில் மிகவும் முக்கியமானது பெட்ரும். தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் இதுவே ஏற்ற இடம். மற்றவர்களுக்கே ஆனந்தம் எனும் போது, தம்பதியர்களுக்கு அது, அலாதி இன்பம் தரும் இடம் தான் அல்லவா!.

அனைவருக்கும் சந்தோஷம் தரும் பெட்ரூமில், சில சின்ன சின்ன பிரச்சனைகள், சிரமங்களும் உள்ளது. அவற்றை பெரிதுபடுத்தாமல், சமாளிக்கப் பழகி கொண்டால் என்றுமே ரொமான்ஸ் தான் என்கிறார்கள் குடும்ப நல நிபுணர்கள்.
குறட்டை விடுவது, அதிகாலையில் லைட் போடுவது, புரண்டு படுப்பது போன்ற சில விடயங்களில், விதிமுறைகளைப் பின்பற்றினால் பெட்ரூம் மட்டுமல்ல, வாழ்க்கையே இன்பமயமாகி விடும் என்று குடும்ப நல நிபுணர்கள் கூறுகின்றனர்.
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே சில வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருப்பர். அப்போது, நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், நாசல் ஸ்டிரிப் அணியலாம் அல்லது மருத்துவரை அணுகி நிவாரணம் பெறலாம்.
பாதிக்கப்படும் நபர் நீங்களாக இருக்கும் பட்சத்தில், பஞ்சை காதில் வைத்து அடைத்து கொள்ளலாம். இல்லையென்றால், மெல்லிய இசையை காதில் கேட்டபடி தூங்கலாம். இப்படி விட்டுக் கொடுப்பதால் இருவருக்கும் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இந்த சின்ன விடயத்திற்காக விவாகரத்து வரை செல்வது கொஞ்சம் அதிகம் தானே!.
படுக்கையில் உருளும் ஆசாமிகளின் பக்கத்தில் படுப்பது, கொஞ்சம் கஷ்டமான விடயம் தான். இருப்பினும், உறவு முக்கியம் அல்லவா!. அதனால், புரண்டு புரண்டு படுக்கும் நபர்கள் வாழ்க்கைத் துணைக்கு தொல்லை கொடுக்காமல், தரையில் படுத்து புரள்வது மிகவும் சிறந்தது.
இல்லற இன்பத்துக்குப் பிறகு, சிலருக்கு தூக்கம் சொக்கும். ஆனால், வாழ்க்கைத் துணையோ சிறிது நேரம் பேச ஆசைப்படுவார். அப்போது, அவரிடம் “குட்நைட்” சொல்லி அவரை கோபப்படுத்தாமல், கொஞ்ச நேரம் உங்கள் தூக்கத்தை தியாகம் செய்துவிட்டு, அவரிடம் சிறிது நேரம் பேசலாம்.
பெரும்பாலும், சின்ன சின்ன விடயங்கள் தான் பெரிய அளவில் உருவெடுத்து, அழகிய உறவுகளை பிரித்து விடுகிறது.
எனவே, வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேசினால், சிறிய அளவாக இருக்கும் போதே, பிரச்சனைகளை மென்மையாக எடுத்துச் சொன்னால் பிரச்சனைகளை அகற்றி விடலாம். பின்பு, படுக்கை அறையைப் போலவே வாழ்க்கையும் இன்பமாகும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.