Home பெண்கள் அழகு குறிப்பு ரெண்டே நாளில் கரும்புள்ளிகள் போகணுமா?… இதோ சிம்பிள் டிப்ஸ்…

ரெண்டே நாளில் கரும்புள்ளிகள் போகணுமா?… இதோ சிம்பிள் டிப்ஸ்…

28

முகத்தில் பரு வந்தாலே எரிச்சலடைவோம். ஏனெனில் அந்த பருக்கள் அப்படியே கரும்புள்ளிகளாக மாறிவிடும்.

அப்படியே என்னதான் விலையுயர்ந்த கிருமிகளை வாங்கிப் போட்டாலும் கூட, கரும்புள்ளிகள் நிரந்தரமாக மறைவதில்லை. அதற்கு வெகுநாள்கள் எடுக்கும். ஆனால் நாம் வீட்டில் பயன்படுத்தும் சில எளிய பொருள்கள் போதும் நம்முடைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க.

அதுவும் ரெண்டே நாளில் கரும்புள்ளிகளைப் போக்க என்ன செய்யலாம்?…

எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பளபளக்கும்.

பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டரில் கலந்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, காய்ந்ததும் நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து, அதனுடன் சிறிதளவு லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் உள்ள கருமைகள் மறைந்துவிடும்.