Home சமையல் குறிப்புகள் ராஜஸ்தானி சிவப்பு இறைச்சி குழம்பு

ராஜஸ்தானி சிவப்பு இறைச்சி குழம்பு

35

தேவையானவை


225g தயிர் நன்கு கலக்கியது
1 ண தேக்கரண்டி வறுத்த சீரகம்
2 ண தேக்கரண்டி தனியா தூள்
2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்,
தேவையான அளவு உப்பு
நெய் அல்லது தாவர எண்ணெய் 3 தேக்கரண்டி
6-8 கிராம்பு
15 காய்ந்த சிவப்பு மிளகாய் (விதை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, மிதமான சூடான நீரில் 1/2 அல்லது ஒருமணி நேரம் உறவைத்தது)
6 பச்சை ஏலக்காய்
3 கருப்பு ஏலக்காய்
2 பிரியாணி இலைகள்
2 பெரிய வெங்காயம், பொடியாக அரிந்து கொள்ளவும்.
4 தேக்கரண்டி பூண்டு, இஞ்சி விழுது
ஒரு கிலோ ஆட்டுக்குட்டி / ஆட்டிறைச்சி 4cm (1 ண அங்குலஅளவில்) எலும்பு துண்டுகளோடு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
550 மில்லி தண்ணீர் / மட்டன் தண்ணீர்
1 தேக்கரண்டி தக்காளி சாறு, 2 தேக்கரண்டி இதனுடன் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி
1 எலுமிச்சை சாறு
தேவைக்கேற்ப உப்பு
நெய் அல்லது காய்கறி எண்ணெய் 2 தேக்கரண்டி
6-8 சுடு தண்ணீரில் ஊற வைத்த மிளகாயை வடிகட்டி உலர்த்திக் கொள்ளவும்.

செய்முறை
செய்முறை 1: மேற்க்கூறிய எல்லா பொருட்களையும் தயிரோடு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
செய்முறை 2: ஒரு அடிப் கனமான கடாயில் நெய் / எண்ணெயை சூடுபடுத்தி கொண்டு, கிராம்பு, பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய், பிரியாணி இலைகள் மற்றும் தேய்த்து உலர்ந்த மிளகாய் 4 சேர்க்கவும். நன்கு வதங்கி நிறம் மாறிய பின் இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் சேர்க்கவும். இந்த கலவையை பொன்னிறமாகும் வரை விடாது கிளரவும்.
செய்முறை 3: இப்போது சுமார் 5 நிமிடங்கள் அதிக சூட்டில் இறைச்சி சேர்த்து விடாது கிளரி, தோய்த்து உலர்ந்த மிளகாய் மீதமுள்ளவற்றை சேர்க்கவும். இதை இன்னும் ஒரு 10 நிமிடங்கள் குழம்பு பதத்திற்கு இறைச்சி நன்கு வேகும் வரை சமைக்கவும்.
செய்முறை 4: பின்னர் தீயை மிதமாக வைத்து தயிர் கலவையை சேர்த்து, தயிர் முற்றிலும் கலந்து வரும் வரை வேக வைக்கவும்.
செய்முறை 5: ஆட்டிறைச்சி தண்ணீருடன் தக்காளி விழுதை சேர்த்து, 15 நிமிடம் மூடி வைத்து, மிதமான தீயில் 30 முதல் 40 நிமிடம் வரை இறைச்சி நன்கு வேகும் வரை சமைக்கவும். இறைச்சி நன்கு வெந்த மிறகு, அடுப்பை அணைத்து விட்டு, அடுப்பில் இருந்து இறக்கி இதை ஆற வைக்கவும்.
செய்முறை 6: ஒரு சிறிய கடாயில் நெய்யை நன்கு சூடாக்கிக் கொண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து சூடாக்கவும். இதன் நிறம் மாறிய உடனே எடுத்து ஆட்டிறைச்சியின் மீது தெளிக்கவும்.
செய்முறை 7: இறுதியாக, எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்..